அன்னை தந்த தமிழே
உயிரெனும் மேலாய் தானே
உன்னை நேசிக்கிறேன்
உன்னை பூஜிக்கிறேன்..
முத்தமிழாய் என்னுள்ளே
முக்கனியாய் இனிக்கிறாய்
முக்காலமும் அறிந்தவன்
சொல்லித்தான் போனானாம்..
எக்காலமும் உன்னோடுதான் என்வாழ்வு
அவன் தந்த வாக்கை மெய்ப்பித்தே
புலம் பெயர்ந்த போதும் நீங்காது
கனவிலும் நினைவிலும் நீயாக..
காதல் செய்கிறேன் உன்னை
தூக்கத்திலும் கவிதைகளாய்
உளறுகிறேன் பிதற்றுகிறேன்
பார்த்தோர் என்னை பைத்தியமென்றனர் ..
வைத்தியம் நீ யென்று அவர்களுக்கு
புரிய நியாயமில்லை இலாபமுமில்லை
அக்கரை சீமையிலே வாடும் குயில் நான்
ஈழமண் தொட்டு பாடும் காலம் எப்போது
ஈழத்தமிழிச்சி எனும் பெருமையோடு...
நீ சொல்வாய் அமுதினுமினிய தமிழே
எனை ஆளும் அழகிய தமிழே
உயிரெனும் மேலாய் தானே
உன்னை நேசிக்கிறேன்
உன்னை பூஜிக்கிறேன்..
முத்தமிழாய் என்னுள்ளே
முக்கனியாய் இனிக்கிறாய்
முக்காலமும் அறிந்தவன்
சொல்லித்தான் போனானாம்..
எக்காலமும் உன்னோடுதான் என்வாழ்வு
அவன் தந்த வாக்கை மெய்ப்பித்தே
புலம் பெயர்ந்த போதும் நீங்காது
கனவிலும் நினைவிலும் நீயாக..
காதல் செய்கிறேன் உன்னை
தூக்கத்திலும் கவிதைகளாய்
உளறுகிறேன் பிதற்றுகிறேன்
பார்த்தோர் என்னை பைத்தியமென்றனர் ..
வைத்தியம் நீ யென்று அவர்களுக்கு
புரிய நியாயமில்லை இலாபமுமில்லை
அக்கரை சீமையிலே வாடும் குயில் நான்
ஈழமண் தொட்டு பாடும் காலம் எப்போது
ஈழத்தமிழிச்சி எனும் பெருமையோடு...
நீ சொல்வாய் அமுதினுமினிய தமிழே
எனை ஆளும் அழகிய தமிழே
0 Kommentare:
Kommentar veröffentlichen