பூரிப்பாய் ஆக்கிவிட்டு
பூஜைகள் செய்யாமல் தட்டி
பூமிக்குள் போடுகிறார் வெட்டி
மொட்டுக்கள் விரியுமுன்னே
மோகத்தில் சருகாய் ஆக்கி
பட்டுத்தான் போகும் படி
பாவிகள் செய்கின்றாரே ?
எட்டப்பர் செய்கை கண்டு
ஏங்கியே சோகம் கொண்டு
எட்டித்தான் பூத்ததின்று
எருக்கிலை பூவும் ஒன்று .
மாதரை மலினமாக்கி
மண்ணறை அனுப்புகின்ற
காதகர் செய்கை தாங்கா
கதறும் பூ கோபம் பொங்க
ஆக்கம் கவிஞர். ஏரூர் கே. நெளஷாத்
0 Kommentare:
Kommentar veröffentlichen