உடல் தின்னும் பசி
உயிர் வாடும் நிலையில்
உறவுமின்றி ஊருமின்றி
உடல் வெந்து போகுதிங்கே
ஆழமறியப் பசியது
உடலில் நிலைபுரியாது
கண்டபடி பசிக்கிறது
கருகித்தான் போகிறது
அரைச்சாண் வயிறும்
வாழ வழியும் தெரியவில்லை
வறுமையென்னும் கோட்டுக்குள்ளே
நாவறண்டு நலமின்றி
திண்டாடுதே மனித இனம்
இருக்கும் போது
கொடுக்க மறக்கும் உறவுகள்
இறந்தபின் படையல்கள்
மட்டும் பலமாக நடக்கிறது
பணமொன்றே குறியாக
பாசங்கள் இங்கே விலையா
அண்ணன் என்ன தம்பி என்ன
அடிபிடிகள் வளருதிங்கே
பாழப்போன இந்த மனசு
பாத்து பாத்து ஏங்குமிங்கே
பசியில் வேகுது வயிறும்தான்
பார்போருக்கும் மனமும் இரங்கவில்லை
மழையின்றி விவசாயம்
மண்ணில் கருதித்தான் போகிறதே
ஊருக்கே உணவளிக்கு உத்தமர்கள்
உடல் தின்னும் பசிக்காக
இரைதேடுவது பாவமல்லோ..??
ஆக்கம் .ஜெசுதா யோ.
உயிர் வாடும் நிலையில்
உறவுமின்றி ஊருமின்றி
உடல் வெந்து போகுதிங்கே
ஆழமறியப் பசியது
உடலில் நிலைபுரியாது
கண்டபடி பசிக்கிறது
கருகித்தான் போகிறது
அரைச்சாண் வயிறும்
வாழ வழியும் தெரியவில்லை
வறுமையென்னும் கோட்டுக்குள்ளே
நாவறண்டு நலமின்றி
திண்டாடுதே மனித இனம்
இருக்கும் போது
கொடுக்க மறக்கும் உறவுகள்
இறந்தபின் படையல்கள்
மட்டும் பலமாக நடக்கிறது
பணமொன்றே குறியாக
பாசங்கள் இங்கே விலையா
அண்ணன் என்ன தம்பி என்ன
அடிபிடிகள் வளருதிங்கே
பாழப்போன இந்த மனசு
பாத்து பாத்து ஏங்குமிங்கே
பசியில் வேகுது வயிறும்தான்
பார்போருக்கும் மனமும் இரங்கவில்லை
மழையின்றி விவசாயம்
மண்ணில் கருதித்தான் போகிறதே
ஊருக்கே உணவளிக்கு உத்தமர்கள்
உடல் தின்னும் பசிக்காக
இரைதேடுவது பாவமல்லோ..??
ஆக்கம் .ஜெசுதா யோ.
0 Kommentare:
Kommentar veröffentlichen