மழைப்பொழுதுகளில் உன்னோடு
நனைவது பிடித்திருந்தது
மழையின் ஒவ்வொரு துளிகளையும்
கைகளிலேந்தி இரசிக்க பிடிந்திருந்தது
தெப்பமாய் நனைந்து தோய்ந்து
வெள்ளத்தில் காகித வள்ளம் ஓடவிட்டு
குச்சொழுங்கைவழியே நெருஞ்சி முள்ளு
குத்தினாலும் பொருட்படுத்தாது நடந்ததும்
குச்சி ஐசை உறிஞ்சி குடித்து சிரித்து
மம்மலுக்குள் மாரிகால தவளைகளாய்
பாடியும் ஆடியும் பறந்தும் திரிந்த போது
பட்டாம்பூச்சிகள் நாணம் கொள்ள
பதின்மத்து பருவ மாற்றங்களின் விலகல்..
வந்தபோதும் மாறாத நம் நட்புக்கு
யார் கண்பட்டதோ நீ தொலைந்தாய்
இடம்பெயர்ந்துதான் போனாயாம்
பார்த்தவர்கள் சொன்னார்கள் ..
விளாத்தியில் ஏறி பறித்த காய்களும்
கிளிச்சொண்டு மாங்காய் பறித்தும்
கிளுவங்கதியாலுக்குள் நீ எனக்காக
நுழைந்து சென்று காஞ்சோடியில்
கால் சொறிய நீ துள்ளியதும்
அதைப்பார்த்து கை கொட்டிசிரித்ததும்..
மழைபொழியும் பொழுதுகளில்
சலசலத்து ஓடும் உன் நினைவுகள்
மனதிற்குள் இன்னும் மா மழையாக
மனத்தோட்டத்தில் பொழிகிறது...
நனைவது பிடித்திருந்தது
மழையின் ஒவ்வொரு துளிகளையும்
கைகளிலேந்தி இரசிக்க பிடிந்திருந்தது
தெப்பமாய் நனைந்து தோய்ந்து
வெள்ளத்தில் காகித வள்ளம் ஓடவிட்டு
குச்சொழுங்கைவழியே நெருஞ்சி முள்ளு
குத்தினாலும் பொருட்படுத்தாது நடந்ததும்
குச்சி ஐசை உறிஞ்சி குடித்து சிரித்து
மம்மலுக்குள் மாரிகால தவளைகளாய்
பாடியும் ஆடியும் பறந்தும் திரிந்த போது
பட்டாம்பூச்சிகள் நாணம் கொள்ள
பதின்மத்து பருவ மாற்றங்களின் விலகல்..
வந்தபோதும் மாறாத நம் நட்புக்கு
யார் கண்பட்டதோ நீ தொலைந்தாய்
இடம்பெயர்ந்துதான் போனாயாம்
பார்த்தவர்கள் சொன்னார்கள் ..
விளாத்தியில் ஏறி பறித்த காய்களும்
கிளிச்சொண்டு மாங்காய் பறித்தும்
கிளுவங்கதியாலுக்குள் நீ எனக்காக
நுழைந்து சென்று காஞ்சோடியில்
கால் சொறிய நீ துள்ளியதும்
அதைப்பார்த்து கை கொட்டிசிரித்ததும்..
மழைபொழியும் பொழுதுகளில்
சலசலத்து ஓடும் உன் நினைவுகள்
மனதிற்குள் இன்னும் மா மழையாக
மனத்தோட்டத்தில் பொழிகிறது...
ஆக்கம் ரதிமோகன்
0 Kommentare:
Kommentar veröffentlichen