உலகில்
அழகிய
ஆயுதம்
அன்பு..!
இழகிய
இதயம்
அன்பின்
ஆலயம்.!
உருக்கம்
ஊற்றானால்
நெருக்கம்
நெகிழும்.!
முதியோரை
அணைத்தல்
முன் இருத்தி
மதித்தல்
நிறை அருள்.!
புண்ணியம்
சேர்த்திட
கண்ணியம்
அவசியம்.!
ஊட்டும் போது
உள்ளம்
உருகும்
பாசம் பெருகும்.!
படைத்தோர்க்கு
பசியாறிட
படைக்காதே
அருகமர்ந்து
பகிர்ந்து கொள்.
பரவசமாகும்....!
ஆக்கம் கலைஞர் தயாநிதி கவிை
0 Kommentare:
Kommentar veröffentlichen