யேர்மன் நாட்டில் உள்ள கஸ்ரொப் றவுக்சல் தமிழாலயத்தின் 10 வது ஆண்டு
விழா சிறப்பாக நடந்திருந்தது அதில் தமிழாலயத்தின் தந்தை ஆசிரியர் திரு.இரா.
நாகலிங்கம் அவர்களையும் அவரது துணைவியார் திருமதி. ஆ. நாகலிங்கம்
அம்மையாரையும் கஸ்ரொப்-றவுக்சல் தமிழாலய நிர்வாகமும் தமிழாலயப்
பெற்றோர்களும் அவர்களுக்கான கௌரவத்தை வழங்கினர்.அதுமட்டுமல்ல ஆசிரியர்
திரு. இரா. நாகலிங்கம் அவர்கள் பேசும் போது தான் செய்த பணிகளை மக்களோடு
பகிர்ந்து கொண்டது மட்டுமல்லாது தானும் தனது துணைவியாரும் இன்றும்
ஆசியர்களாகப் பணியாற்றுவதையிட்டு மகிழ்;ந்து கொள்வதாகவும் தங்கள்
இறுதிக்காலம் வரை தமது பணிகள் தொடரும் என்றும் கூறி நின்றார். முதிர்ந்த
வயதிலும் தமிழ்காக்க உழைக்கும் அவர் சேவையும் அவர் விருப்பும் நிறைவேற
வாழ்த்துவோம்.
தமிழ்வாழ நாம்வாழ்வோம் நாம் வாழத்தமிழ்வாழும் இதற்க்கு வளம் தீட்டிய தமிழாலயத்தின் தந்தை ஆசிரியர் திரு.இரா. நாகலிங்கம் அவர்களுக்கு நன்றி
தமிழ்வாழ நாம்வாழ்வோம் நாம் வாழத்தமிழ்வாழும் இதற்க்கு வளம் தீட்டிய தமிழாலயத்தின் தந்தை ஆசிரியர் திரு.இரா. நாகலிங்கம் அவர்களுக்கு நன்றி
0 Kommentare:
Kommentar veröffentlichen