சீனாவின் ஷாங்காயில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கனடா வாழ் ஈழத்
தமிழர் ஒருவர் தயாரித்த திரைப்படமொன்றுக்கு உயர்விருது
அளிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஷாங்காய் கலாசார சதுக்கத்தில் 16வது சர்வதேச திரைப்பட விழா அண்மையில் நடைபெற்று முடிந்தது.
இந்த திரைப்பட விழாவில் உலகெங்கிலுமிருந்து 1600க்கும் மேற்பட்ட திரைப்படங்களிலிருந்து 12 திரைப்படங்கள் உயர் விருதுக்கான இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியிருந்தன.
இதில் கனடா வாழ் ஈழத்தமிரான லெனின் எம்.சிவம் அவர்களது இயக்கத்தில் உருவான த கன் என்ட் த ரிங்க் ( A GUN & A RING ) திரைப்படமும் உயர்விருதுக்கு தெரிவாகியிருந்தது.
தெரிவுசெய்யப்பட்ட ஏனைய படங்களுக்கு சவாலாக அமைந்திருந்த A GUN & A RING திரைப்படக் குழுவினரை பாராட்டி மதிப்பளிக்கும் வகையில் சங்காய் 16 வது சர்வதேச திரைப்பட விழாவின் இறுதிநாள் விருது வழங்கும் விழாவை A GUN & A RING திரைப்படக் குழுவினரே ஆரம்பித்து வைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது பெருமைக்குரிய விடயமாகும்.
7 நடுவர்கள் கொண்ட குழுவின் தலைமை நடுவரான டொம் ஹுப்பர் (பிரித்தானிய இயக்குனர்) தனது அரங்க உரையின்போது A GUN & A RING திரைப்படத்தை வெகுவாகப் பாராட்டியதுடன் இப்படத்தில் நடித்திருந்த பிரான்சைச் சேர்ந்த நடிகர் பாஸ்கர் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்ததாக சிலாகித்து, பாராட்டுத் தெரிவித்திருந்தார்.

0 Kommentare:
Kommentar veröffentlichen