கட்டபொம்மன் கொள்ளைக்காரனா…? கொதிக்கும் நாயக்கர் சமுகம்…! May 22, 2013

மக்களுக்கான நீதி” என்ற ஒரு சமூக மாத இதழில் கிருஷ்ணபரையனார் என்பவர் வீரபாண்டிய கட்டபொம்மன் தியாகியா…? கொள்ளைக்காரனா…? என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார். அதில் மா.பெ.சிவஞான கிராமணியார் அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு பற்றி எழுதும் போது சரியான வீரர்கள் யாரும் கிடைக்காமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்.
அப்படி தமிழர்கள் யாரையும் பற்றி எழுதாமல் விட்டால் தமிழகத்துக்கு இழுக்கு ஏற்பட்டுவிடுமே என்ற எண்னத்தில் வெள்ளைக்காரனை எதிர்த்த ஒரே காரணத்துக்காக கட்டபொம்மனை வீரனாக்கி எழுதிவிட்டார்.
இப்படி வெள்ளையனை எதிர்த்தவர்களை எல்லாம் வீரர் என்றால் எத்தனையோ திருடர்களையும், கொல்லையர்களையும் வெள்ளைக்காரர்கள் தூக்கில் போட்டுள்ளார்கள். அவர்களையும் நாம் சுதந்திர போராட்ட வீரர்கள் என்று எழுதவேண்டியிருக்கும்.
கிராமணியார் கட்டபொம்மனை நாடகமாக தயாரித்தார். பின்னர் அதை பந்துலு அவர்கள் சினிமாவாக எடுத்தார். சினிமாவின் பிரமாண்டத்தாலும், நடிகர் திலகத்தின் ஈடு இணையற்ற நடிப்பாலும், ஒரு கோழை, வழிப்பறி கொள்ளைக்காரன் வீரனாகிவிட்டான்.
கட்டபொம்மன் ஒரு வீரனுமல்ல, அவன் பாண்டியனுமல்ல… அவன் ஒரு வழிப்பறி கொள்ளைக்காரன், ஆந்திராவை சேர்ந்த தெலுங்கன் என்று கட்ட பொம்மனை எட்டுப்பக்கத்திற்கு விமர்சனம் செய்து எழுதியுள்ளார் கிருஷ்ணப்பரையனார்.
’’வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்ளைப்பற்றி தவறான தகவல்களை வெளியிட்டுள்ளார் கிருஸ்ணபரையனார் அவர்கள். இந்த கட்டுரைக்கு அவர் வருத்தம் தெறிவிக்கவேண்டும், இல்லையானால் தமிழகம் முழுவதும் அவரை கண்டித்து நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவோம்.
சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தை இழுத்துபூட்டும் போராட்டம் நடத்துவோம்’’ என்கிறார் தமிழ்நாடு நாயுடு, நாயக்கர் மகர்ரஜகள் சங்க மாநில இளைஞர் அணி அமைப்பாளர் பிரனவ்குமார்.
உயிரோடு உள்ளவர்களால்..செத்துவிட்டவர்களுக்கும் பிரச்சனையப்பா….
– சிவசுப்பிரமணியன்/நன்றி /இலக்கியம் நக்கீரன்
வீரபாண்டிய கட்டபொம்மன் ..முழு நீள திரைப்படம்
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments System

Disqus Shortname

Comments system