வெள்ளிப் பனிமலை மீதுலாவுவோம் அடி மேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம்"
இது "கப்பலோட்டிய தமிழன் "திரைப்படத்தில் இடம்பெற்ற மகாகவி பாரதியாரின் பாடல்.

இந்த பாடலைக் கேட்கும்போது எங்களூர் நந்திக் கடல்தான் எனக்கு எப்போதும் ஞாபகத்தில் வரும்.
இந்த நந்திக்கடற்கரை நான் பிறந்த ஊரான வட்டுவாகலில் உள்ளது.
எங்கள் ஊருக்கென்று இயற்கை அளித்த வரப்பிரசாதமே இந்த நந்திக்கடல்தான்.
இது சம்பந்தமாக பலரும் பலவாறான வரலாறுகள் எழுதியிருக்கிறார்கள்.
கர்ணபரம்பரை கதைகளும் இது பற்றி உண்டு.
நானும் "சொர்ணம்மா "சிறுகதைத் தொகுப்பில் "நந்திக்கடல்"என்ற சிறுகதை எழுதியிருக்கிறேன்.
இந்த நந்திக்கடல் ஒருகாலத்தில் வயல் வெளியாக இருந்தது என்று அம்மா சொல்லுவா.
மாரிகாலத்தில் எங்கள் ஊர்ப்பக்கம் வருபவர்கள் இது பெரும் சமுத்திரம் என்றே நினைப்பார்கள். அந்த அளவிற்கு நீர் நிறைந்து பரவி சமுத்திரம் போல் காட்சியளிக்கும்.
எங்கள் ஊருக்கு அழகையும்,செல்வத்தையும் வாரிவழங்கும் ,இந்தக் கடல் கோடைகால வரட்சியின் போது வற்றிவிடுவதும் உண்டு.
அந்த நேரத்தில் இந்தக் கடலில் உப்பு விளையும் .ஊர்மக்கள் தேவையான உப்பை சேகரித்து வைப்பதுண்டு.
இந்தப் பிரதேசம் முழுவதுமே நந்திஉடையாருக்குச் சொந்தமான வயல் பிரதேசமாக இருந்ததாகவும், குளக்கோட்டன் என்ற குறுநிலமன்னன் இந்த பகுதியை ஆண்டு வந்தான் என்றும்.அவனுக்கு ஏழுமகன்மார் என்றும் நந்திஉடையாருக்கு ஏழுபெண்கள் என்றும் ,குளக்கோட்டன் பெண் கேட்டு போனதால் நந்தியார் மறுப்புத்தெரிவித்ததைத் தொடர்ந்து எழுந்த பிரச்சினையின் விளைவுதான் நந்திக்கடல் ஆனது என்று ஒரு கதை ஒன்றுண்டு(தொடரும்)

0 Kommentare:
Kommentar veröffentlichen