நெடுந்தீவில் தனிநாயகம் அடிகளின் நூற்றாண்டுப் பெருவிழா! June 17, 2013

யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கம், யாழ். மறை மாவட்டம் என்பவற்றின் ஆதரவுடன் நெடுந்தீவுப் பொதுமக்கள் நடாத்தும் நெடுந்தீவு மண்ணின் மைந்தன் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டு விழா 18.06.2013 செவ்வாய்க்கிழமை காலை, மாலை என இரண்டு அமர்வுகளாக நெடுந்தீவில் இடம்பெறவுள்ளது. காலை அமர்வு தீவக வலயக் கல்விப் பணிப்பாளர் திருஞானம் ஜோன் குயின்ரஸ் தலைமையில் காலை 9 மணிக்கு இடம்பெறும். நெடுந்தீவு துறைமுக நுழைவாயிலில் அமைந்துள்ள தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளின் திருவுருவச் சிலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சில்வஸதிரி அலன்ரீன் மாலை அணிவித்து வணக்கம் செலுத்துவதைத் தொடர்ந்து நெடுந்தீவு மகாவித்தியாலம் வரை அடிகளாரின் திருவுருவப் பட ஊர்வலம் இடம்பெறும்.
நிகழ்வில் வரவேற்புரையினை நெடுந்தீவு மகா வித்தியாலய அதிபர் திருமதி சா.கிருஸ்ணதாசும் தொடக்கவுரையினை கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை அதிபர் வே.கா. கணபதிப்பிள்ளையும் சிறப்புரைகளை யாழ்ப்பாணத் தழிழ்ச்சங்கத் தலைவரும் யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடப் பீடாதிபதியுமாகிய பேராசிரியர் தி.வேல்நம்பி, கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளரும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கப் பொருளாளருமாகிய ச.லலீசன், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கச் செயலாளர் சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல் நெடுந்தீவு மகா வித்தியாலய ஆசிரியர் அ. பீலிக்ஸ் ஜேக்கப் ஆகியோர் நல்குவர். நெடுந்தீவு றோ.க. மகளிர் கல்லூரி, புனித சவேரியார் றோ.க. வித்தியாலயம், நெடுந்தீவு மகா வித்தியாலயம், சைவப் பிரகாச வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் மாணவர்கள் வழங்கும் கலை நிகழ்வுகள் காலை அரங்கில் இடம்பெறவுள்ளன. நெடுந்தீவு கோட்டக் கல்விப் பணிப்பாளர் க.அரசரத்தினம் நன்றியுரை நல்குவார்.
மாலை நிகழ்வுகள் யாழ்.தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுவிழாக் குழுச் செயலாளர் அருட்கலாநிதி அ.பி.யெயசேகரம் தலைமையில் தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள் திறந்தவெளி அரங்கில் இடம்பெறும். நெடுந்தீவு கிராம அலுவலர் என். நடராசா இறை வணக்கம் இசைப்பார். வே. தட்சணாமூர்த்தி தமிழ்த்தாய் வாழ்த்து இசைப்பார். இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க நெடுந்தீவுக் கிளைத் தலைவர் ஈ. அருந்தவசீலன் வரவேற்புரையையும் பிரம்மஸ்ரீ கா.புவனேந்திரசர்மா, அருட்பணி எஸ். அமலதாஸ் அடிகள், வண.பிதா தாவீது அடிகள் ஆகியோர் ஆசியுரைகளையும் நல்குவர். தென் இந்தியத் திருச்சபையின் முன்னாள் பேராயர் அதிவண. கலாநிதி எஸ். ஜெபநேசன் தொடக்கவுரையாற்றுவார்.
வாழ்த்துரைகளை நெடுந்தீவு பிரதேச சபைத் தலைவர் தானியல் றெக்சியன், பிரதேச செயலர் ஆ.சிறி ஆகியோரும் கருத்துரையை நெடுந்தீவு தனிநாயகம் அடிகள் தமிழ் மன்றத் தலைவர் கலாபூஷணம் புலவர் அரியநாயகமும் முதன்மையுரையை நாடாளுமன்ற உறுப்பினர் சில்வஸ்திரி அலன்ரீனும் சிறப்புரையை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத் தலைவர் பேராசிரியர் தி.வேல்நம்பியும் வழங்கவுள்ளனர். சைவப் பிரகாச வித்தியாலய அதிபர் கே .சச்சிதானந்தம் நன்றியுரை நல்குவார்.
சிறப்பு நிகழ்வாக பட்டிமன்றம் இடம்பெறும். ‘குடும்பப் பொருளாதாரத்தைப் பேணுவதில் பெரிதும் முன்னிற்பவர்கள் ஆண்களா? பெண்களா? என இடம்பெறும் பட்டிமன்றத்தில் ஆண்களே என்ற அணியில் இரா. செல்வவடிவேல், தி.தயாபரன், லோ.துஷிகரன் ஆகியோரும் பெண்களே என்ற அணியில் ச.லலீசன், ச.டேவிற்சன், ரி.கருணாகரன் ஆகியோரும் வாதிடவுள்ளனர். நிறைவு நிகழ்வாக கலைமாமணி சைமன் இயேசுதாசன் அண்ணாவியாரின் அண்ணாவியத்தில் உருவாகிய முத்தா மாணிக்கமா என்ற நாட்டுக் கூத்து இடம்பெறும்.
— எஸ்.ரி.குமரன் –

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments System

Disqus Shortname

Comments system