முடிவில்..!கவிதை கவிஞர் தயாநிதி

உயிரில்லா
நோட்டுக்கள்
நிரந்தரமில்லா
நோட்டுக்கள்
ஆனாலும்......

ஆட வைக்கும்
பாட வைக்கும்
தேட வைக்கும்
கூடிப் பிறந்தவனுக்கும்
குழிகள் பறிக்கும்....

தொடர்
குற்றங்களால்
குலைய வைக்கும்
பாவங்களை
மூட்டைகளாய்
சுமக்க வைக்கும்..;

அன்பினை
அகற்றும்
ஆணவத்தை
பெருக்கும்
சுற்றங்களை
சுருக்கும்.....

மாயையில்
மிதக்கும்
மகிழ்ச்சியின்
முகட்டில்
கூடாரம்
அடிக்கும்...!

முடிவில்
வெற்றுக்
கரங்களுடன்
தனித்தே
பயணிக்கும்..!
படம்; நன்றி
மினி வரன்
ஆக்கம் கவிஞர் தயாநிதி

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments System

Disqus Shortname

Comments system