பச்சோந்தி!கவிதை.ஜெசுதா யோ

 நிறம் மாறும் முன்பே
மனம் மாறும் மனிதர்கள்
எங்கும் நீக்கமற
நிறைந்திருக்கும் சுயநலம்../

தன்னையிழந்து தனக்காக
தடுமாறும் மனிதம்
துரோகச் செயலின்
துன்பம் இழைத்துப் போகும்
எதிராளியை வென்ற கயவர்கள்.../

உருமாறும் இவர்கள்
சந்தர்ப்பம் பார்த்து
சதிசெய்யும் நாசகாரர்கள்.../

சூழலுக்கு தகுந்தாற் போல்
தன்னை மறைப்பதில்
இவனைவிட சிறப்பாக
இருந்திட முடியாத மனிதர்கள்.../

சிரிப்பு கூட நஞ்சில் விழைந்ததுவே
உள்ளொன்று வைத்து
முகம் ஒன்று பேசும் முகமூடி மனிதர்கள்...//

இயற்கையை வென்ற இவர்கள் துரோகம்
எத்தனை உயிர்களையும்
குடித்துப் போக
எள்ளளவும் மனம் நோகாத
மாயாஜால வித்தகர்கள்...//

பச்சோந்தி மனிதா
நிறம்மாறும் உன்நிலையெண்ணி
மனம் வாடும் மனிதர்கள் கோடி
எண்ணித்தான் திருந்தாயோ
இன்னொரு ஜென்மத்தில்
நீ பிறக்காத வரம் வேண்டாயோ..???


ஆக்கம் ..ஜெசுதா யோ.
..
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments System

Disqus Shortname

Comments system