யேர்மனியில் 2010 நடந்தேறிய நடனம் கற்று சித்தியடைந்த நங்கையர்கள்
பங்குகொண்டு வெளிக்காட்டிய ஆற்றுகை வெளிப்பாட்டின் ஓர்பகுதி இது புலம் என்ற
வாழ்வியலில் நாங்கள் எங்களை இனம் காட்ட எமது கலை விழுமியங்களை எமது
தலைமுறையினருக்கு கையழிக்கவேண்டியவர்களாக உள்ளோம் என்பதேயதார்த்தம் அந்த
பணியில் இங்கு வாழும் கலை சார் எமது சமூகம் தமது பணியை ஒழுங்குற செய்து
வருகிறது என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை, அதன் ஓர் வடிவாக நாங்கள் இங்கு
தரும் இந்த காட்ச்சி உங்களுக்கு நிருபிக்கும், இங்கே இந்தப்பிள்ளைகளை
கற்பித்து கலைக்கடன் புரிந்த நற்சிப்பிகள் சாவித்திரி.இமானுவேல் கஸ்துாரி
சலங்கையொலி நாட்டியக் கலைமன்றம் கேர்ண,அமலா அன்ரனி -சுரேஸ்குமார் பாரதி
கலைக்கூடம் எசன், வசந்தாரா சிவஐோதி திலகநர்த்தநாலயம் பிறாங்போட் ஆகிய
சிப்பிகள் இன்னும் இதுபோன்று பலநாட்டிய சிலைகளை செதுக்கி ஈழத்து கலைக்கு
இவர்பணிதொடர எஸ் ரி எஸ் இணைய நிர்வாகத்தின் வாழ்த்துக்கள் அத்தோடு இதில்
கலந்து கொண்டு சிறப்பித்த மாணவிகளான செல்வி லாவனியா.செல்வநாயகம், செல்வி
லக்க்ஷனா சுரேஸ்குமார் , செல்வி மடோனா சிறோமி. செல்வராஐா ஆகியோரும் தாம்
தம் ஆசான்களிடம் கற்ற கலைதனை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சென்று பணியாற்றி
அவர்களும் புதிய சிலைகளை வடிக்க வாழ்த்துகிறது எஸ் ரி எஸ் இணைய நிர்வாகம்,
இடம் இழந்து இனம் இழந்து உலகில் வலம் வரும் இனமாக நாம் இருந்தாலும் ஊரின்
விழுமியம் காக்கும் நிலையில் களம் கொண்டு வாழ்வதும் நாம் என்ற மகிழ்வில்
வாழ்வோம்
Home / Uncategories / கலைக்கடன் புரிந்த நற்சிப்பிகள் !சாவித்திரி,அமலா அன்ரனி ,வசந்தாரா, May 25, 2013
Abonnieren
Kommentare zum Post
(
Atom
)
0 Kommentare:
Kommentar veröffentlichen