யாழ்.இசை விழா 2013 இன்று(01.03.3013) யாழ்.மாநகர மைதானத்தில் கோலாகலமாக
ஆரம்பமாகியது.விழாவின் ஆரம்ப நிகழ்வுகளில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,
வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல்
ஹத்துருசிங்க, யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா,
இலங்கைக்கான நோர்வே தூதுவர், யு.எஸ்.எயிட் பிரதிநிதி கொன்சேட்,
நிறுவனத்தின் சர்வதேச செயற்திட்டங்களின் அதிகாரி, கலாசூரி திருமதி அருந்ததி
சிறிரங்கநாதன், மதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இன்றும்(01.03.3013), நாளையுமாக(02.03.2013) இரண்டு நாள் நடைபெறவுள்ள
மேற்படி இசைவிழாவில் பல்வேறு கலை நிகழ்வுகளாக சாஸ்திரிய, பாரம்பரிய, சமகால
இசை நிகழ்வுகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின், யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு,
மன்னார், வவுனியா, கொழும்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கலைஞர்களும்,
இந்தியா, பிறேசில், நோர்வே, பங்களாதேஷ், பலஸ்தீனம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த
கலைஞர்களும் இந்த இசை விழாவில் கலந்துகொண்டு தமது பாரம்பரிய கலையை
வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதேவேளை, கடந்த ஆண்டு(2012) காலியில் நடைபெற்ற இவ்விசைவிழாவில் 22,000 ற்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Kommentare:
Kommentar veröffentlichen