பாரதிகவிதை முதல் கவிதை! கவிதை.ஜெசுதா யோ

உருவம் இல்லாமல்
என் மனதில் உருவம்
கொடுத்த முதல் கவிதை

பள்ளிப் பருவம்
பாரதிகவிதை படித்த நினைவுகள்
கரும்பலகையில்
ஓரிரு வரிகள் எழுதி
ஆனந்தம் கண்ட நாள்

தழிழ்த்தினப் போட்டி
கவியெழுதி வெற்றிபெற்ற
முதல் வெற்றி எனது

அடுத்தும் நான் எழுதியது
எனது கிராமம்
எத்தனை அழகென
என் தமிழ் ஆசிரியை வாழ்த்தியது
மனம் சிறகடித்தது
மகிழ்வின் உச்சியில்

எங்கள் போராட்டமும்
எங்கள் வாழ்வும்
எனக்கு பிடித்த
முதல் கவிதை

குண்டடிபட்டு
குற்றுயிராய் இருந்த
உறவுகளுக்காய்
எழுதிய கவிதை
என் தமிழுக்காக
நான் எழுதிய முதல்
கவிதை என் மனம் தொட்ட
கவிதை ..
பெருமைகொண்ட கவிதை

இயற்கை காதல் என
பல்சுவைகலந்து
நான் வடித்த கவிகள்

என் இன்பம் துன்பம்
என் ஆறுதல் எல்லாம்
கவிதைகளானது

துயர்சொல்ல முடியாத
தனிமையிலும்
தாய்போல ஆறுதல் தந்தது
என் கவிதைகள்

சமூகம் என் காதல்
படர்ந்த கவிதைகள்
உள்ளமெங்கம்
உறையவைத்த
என் காதலனுக்கான
எழுதிய கவிதைகள்

என் உயிரில் நிறைந்தவன்
இன்னும் என்னோடு வாழ்பவன்
அவன் எழுதும் கவி காண
காத்திருக்கும்,என் கண்கள்
இது தான் என் ஆனந்தம்

இறுதியாக
இன்னும் நான் முற்றுப் பெறவில்லை
கையில் தவழும் குழந்தை
கவிதை எனக்கு தெரியாது
கவிதையாக எண்ணி எழுதுகிறேன்

அனைத்து கவிகளுக்கம்
வாழ்த்தோடு
இன்று நான் எழுதும்
முதல் கவிதை
உனக்கு சமர்ப்பணம்

ஆக்கம் ..ஜெசுதா யோ
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments System

Disqus Shortname

Comments system