குறும்படங்களை வெளியிடுவதன் மூலம் மாணவர்களின் திறன்களை வெளிக்
கொண்டுவரமுடியும் என்று ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மைய இயக்குநர்
தே.தேவானந் தெரிவித்தார்.
ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மைய மாணவர்களின் குறுந்திரைப்பட வெளியீட்டு நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மாணவர்களின் தயாரிப்புக்களான மே 01, விலையேற்றம், சப்பாத்து, வி(வீ)திகள், அம்மா ஆகிய குறுந்திரைப்படங்கள் திரையிடப்பட்டன. இந்தநிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:
ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் மாணவர்கள் தங்கள் பாட அலகுக்கான குறும்படங்களை தயாரித்துள்ளனர். இதன் நோக்கம் மாணவர்களது திறன்களை வெளிக்கொண்டு வருவதாகும்.
பல்கலைக்கழகத்துள் தொடர்ச்சியாக திரையிடல் நிகழ்வுகள் இடம்பெற வேண்டும் என்ற கலைப்பீடாதிபதியின் வேண்டுகோளின் பேரில் இந்த விழா இடம்பெற்றது.
பல்கலைக்கழகத்துள் ஊடாட்டங்கள் நடைபெற வேண்டும். கடந்த ஆண்டிலிருந்து வேற்றுமொழி மாணவர்களும் பல்லைக்கழகத்துக்கு கல்வி கற்க வருகின்றனர். எனவே அனைவரும் கூடுவதற்கான களங்கள் இங்கு அமைக்கப்பட வேண்டும்.

0 Kommentare:
Kommentar veröffentlichen