பீறி ட்டு ஓடும் பெரும்நதியை நல்ல
---பலமான அணையிட்டு மறித்திடலாம்
போரிட்டுக் கொள்ளும் நாடுகளை
----பொறுத்திடுமாறு தணிக்கை இடலாம்
வேரிட்டோடும் விருட்சங்களையும்
---வெட்டி,வேரின் விரைவை குறைக்கலாம்
யாரிடம் சொல்லியும் மறிக்கவோ
-------யாராலும் மறுக்கவோ முடியாதது
ஏறிட்டுப் போகும் எமது வயதும்
----இறங்கிட்டுப் போகும் அழகும் தான்..
காறித் துப்ப வேண்டாம் இது
-------கவிதை இல்லை கவலை
ஆக்கம் முதுமைநேசன்
0 Kommentare:
Kommentar veröffentlichen