அழகானவள்..!கவிதை கவிஞர் தயாநிதி

அரிசியில்
விரல்
புதைத்து
கிறுக்கும்
போதினில்
வேடிக்கை
வினோதமானது..

உறுப்பாக
எழுது என
சிரசினில்
குட்டு
விழும் போது
வேதனையாக
இருந்தது..!

அ ஆ என
உச்சரிக்கும்
போது
ஆச்சரியம்
ஆனந்தம்.
அப்பு.ஆச்சி
அணில். ஆடு
என அழகான
ஆரம்பம்..!

தகரக்
கொட்டகைக்குள்
அகரம்
தழுவியதால்
சிகரம்
உயரம்.;
உயிர்
எழுத்திலும்
உயிர் மெய்யிலும்
ஆயுத எழுத்திலும்
பட்சம்
கொண்டதினால்
உச்சத்தில்
பலரின்
பாராட்டுகள்.!

என் மொழி
போலாகுமா
தமிழே தாய்த்
தமிழே
தலை வணங்கா
நாளேது..!

ஆக்கம் தயாநிதி

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments System

Disqus Shortname

Comments system