புத்திமதி சொல்லும்
பக்குவம் இல்லாமல் இருக்கலாம்
ஆனால் அதை கேட்டு பெறும்
பொறுமை உன்னிடம் இருக்கணும்.
அத்திபாரத்தின் வலி உணர்ந்தவன்
கோபுர அழகினில் மயங்குவதில்லை.
முடிவிடங்களில் மகுடம்
சூடிக்கொள்ளபவர்கள்
ஆரம்ப இடத்தில்
எவராலும் கண்டுகொள்ளப்படாதவர்களே.
கற்றுக்கொள்வதை விரும்புவன்
யாரிடமிருந்தேனும் கற்றுக்கொள்வான்.
தவறுகளை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை
இருந்தும் தற்செயலாக நிகழ்ந்து விடுகிறதே.
உயர பறந்திடலாம் ஆனால்
உன் நிலையினை மறந்திடாவரை
ஆபத்துக்கள் நெருங்கிவிடாது.
வெற்றிகளை தத்தெடுக்க நினைப்பவர்கள்
ஏனோ தோல்விகளை
அநாதைகளாகத்தானே விட்டுவிடுகின்றார்கள்.
இறகுகளையே நம்பி பறந்திடு
ஓய்வெடுத்திட கிடைத்திடும்
கிளைகளை நம்பி பறந்திடாதே.
இன்னும் எதையும் மறக்கவில்லையோயென
என்னிடம் கேட்பவர்களிடம்
சொல்லிக்கொள்வது - நான் இன்னும்
மனநோயாளியாகவில்லையே என்பதுதான்..!!
"நேர்மையோடு செய்திடும் தொழிலே
வாழ்வினில் உண்மையான எழிலை தந்திடும்"
ஆக்கம் அ.பவளம் பகீர்.
பக்குவம் இல்லாமல் இருக்கலாம்
ஆனால் அதை கேட்டு பெறும்
பொறுமை உன்னிடம் இருக்கணும்.
அத்திபாரத்தின் வலி உணர்ந்தவன்
கோபுர அழகினில் மயங்குவதில்லை.
முடிவிடங்களில் மகுடம்
சூடிக்கொள்ளபவர்கள்
ஆரம்ப இடத்தில்
எவராலும் கண்டுகொள்ளப்படாதவர்களே.
கற்றுக்கொள்வதை விரும்புவன்
யாரிடமிருந்தேனும் கற்றுக்கொள்வான்.
தவறுகளை யாரும் ஏற்றுக்கொள்வதில்லை
இருந்தும் தற்செயலாக நிகழ்ந்து விடுகிறதே.
உயர பறந்திடலாம் ஆனால்
உன் நிலையினை மறந்திடாவரை
ஆபத்துக்கள் நெருங்கிவிடாது.
வெற்றிகளை தத்தெடுக்க நினைப்பவர்கள்
ஏனோ தோல்விகளை
அநாதைகளாகத்தானே விட்டுவிடுகின்றார்கள்.
இறகுகளையே நம்பி பறந்திடு
ஓய்வெடுத்திட கிடைத்திடும்
கிளைகளை நம்பி பறந்திடாதே.
இன்னும் எதையும் மறக்கவில்லையோயென
என்னிடம் கேட்பவர்களிடம்
சொல்லிக்கொள்வது - நான் இன்னும்
மனநோயாளியாகவில்லையே என்பதுதான்..!!
"நேர்மையோடு செய்திடும் தொழிலே
வாழ்வினில் உண்மையான எழிலை தந்திடும்"
ஆக்கம் அ.பவளம் பகீர்.
0 Kommentare:
Kommentar veröffentlichen