யார் இந்தக் கவிஞன் ?June 6, 2013

கலைஞன் என்று எவனும் பிறப்பதில்லை அவன் அவனிடம் உள்ள திறன் கடவுள் கொடுத்த வரமாகும் அந்த வகையில்தான் கவிஞன் தான் கற்றதையும் தனது கற்பனைத்திறனாலும் மக்கள் அங்கீகரிக்கிறார்கள்அதே போல் ஆலயங்களும் தங்கள் வளர்ச்சியோடு கலைஞர்களையும் வளர்த்தால் எம்மவர் கலையும் உயரும் அதற்கு உதார ணம் (ஸ்ரீ கனகதுர்க்கைஆலயம்) யேர்மனியில் சிறந்து விளங்கும் ஆலயங்களில் ஒன்றான சுவெ ற்றா ஸ்ரீ கனகதுர்க்கை ஆலயத்தினரால் கௌரவிக்கப்பட்ட குளந்தைக் கவிஞர் என். வி சிவநேசன் அவர்கள்
யாழ்மண்ணில் ஆனைக்கோட்டை தந்த சிறந்த சிந்தனையாளர் என்று கூடக் கூறலாம்
பல்துறைசார்ந்த ஒரு முன்டோடிக்கலைஞன் ஆன இவர்
மலரும் மாலைகள் வீ டியோ பத்திரிகை நடத்துனராக வலம் வந்தவர் ஒளிப்பதிவாளனாக புகழ்கொண்டவர் யேர்மனியில் தமிழ் வானொலிகள் இல்லாத
காலத்தில் உள்ளுர் வானொலி நடத்தியவர் பாரிசில் இருந்து ஒலிபரப்பான எ பி சி வானொ
லியின் ஒருமணித்தியால யேர்மன் நேரத்தை பல ஆண்டுகளாக நடத்தியவர் கவிஞராக சிறந்து விளங்குபவர் கண்ணில்கண்டதை சிற்பமாக்கும் திறன் கொண்டவர் மட்டும் அல்ல எழுத்தாளர் பல மழலைகளுக்கான புத்தகங்கள் எழுதியுள்ளார் அவற்றில்சில பாடல்களாக வெளி வந்துள்ளது அவை புதிய மலர்கள் என்ற மழலைகள் இசைப்பேளையாக வெளிவந்துள்ளது
இந்த இசைப்பேளையை வெளியிட்டு வைத்திருந்தவர் தென் இந்தியத்திரைப்படப்பாடகர் தீபன் சக்கரவர்த்தி ஆவார் அவர் இவரின் பாடல் வரிகள் பற்றிப் பாராட்டினார்
அத்தோடு ஐரோப்பாவில் முதல் முதல் வெளியான முழுமையான மழலைகளின் நம்மவர்படைப்பாகும் அதுமட்டுமல்ல இதில்பாடிய சிறுவர்கள் யேர்மனியில் பிறந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது இதில் கவிஞர் சிவநேசன் சுதந்தினி.தேவராசா சுதேதிகா.தேவராசா தேவிதா.தேவராசா தேனுகா.தேவராசா தேவதி. தேவராசா பாரத்.சிவனேசன் டிலக்சன்.சிவனேசன் தினேசன்.சிவனேசன் ஆகியோர் பாடியுள்ளனர் இதற்கான இசையை ஈழத்து இசைக்கவிஞன் இசைக்த்தென்றல் சிறுப்பிட்டி எஸ‌் தேவராசா அவர்கள் வழங்கி இருந்தார் இவ் இ‌சையமைப்பாளர் நோர்வேயில் உருவான முழுநீள வீடியோ படத்துக்கும் குறும் படங்களுக்கும் 10 மேற்பட்ட பக்திப்பாமாலைஇறுவெட்டுகளுக்கும் பல தேசியப்பாடல்களுக்கும் பற்பல மெல்லிசைப் பாடல்களுக்கும் இசையமைத்தவர் என்பது
எம் ஈழமண்ணுக்குப் பெருமையாகும் கவிஞர் என். வி சிவநேசன் பல
பக்திப்பாமாலைகளுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார் குறிப்பாக டென்மார்க் அபிராமி அம்மன் சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கை ஆகிய ஆலயப்பாடல்கள் எழுதியுள்ளார்அத்தோடு சிறுப்பிட்டி கிராமத்து பாட்டப்பா சைவப்பா என்ற பெரியார்கள் கௌரவிக்க சிறுப்பிட்டி மக்களுடன் ஊர் இணையமாம் சிறுப்பிட்டி இணையமும் இணைந்து முன்வந்தபோது அத்தருணத்தில் கவிஞர் என்.வி.சிவநேசன் அவரது கவிதையின் ஆரம்பத்தால் முக்கவிஞர்களாக இணைந்து சுவிஸ‌் இணையக் கவிஞன் சிறுப்பிட்டி விமல் இசைக்கவிஞன் சிறுப்பிட்டி எஸ‌்.தேவராசா ஆகியோரால் இணைந்து உருவக்கப்பட்ட பாடல் இணையப்பரப்பில் இன்றும் உலாவருகின்றது கூறத்தக்கது இவர்கள் போன்றவர்கள்
சிறந்தோங்க நம்மவர்களுக்கான களங்களின் கதவுகள் திறக்கப்படாமையே காரணம் சிந்தனையாளர்களுக்கு பரந்த வெளியில் திறந்துவைப்ப துயார்? எமது ஈழக்கலைஞர்களின் கலையை வளர்ப்பது யார்? இவரின்திறனுக்கான களம் இன்னும் கிடைக்கவில்லை தவமலர் சிவனேசன் அவர்கள் தயாரிப்பில் புதிய மலர்கள் என்ற மழலைகள் இசைப்பேளை
பின் காந்தக்குரலோன் கானமணி
திரு .கணேஸ‌் தயாரித்து வெளிவந்துள்ள சுவெற்றா ஸ்ரீ கனகதுர்க்கை பாமாலை டென்மார்க் அபிராமி அம்மன் பாமாலைகளே இவரை இனம் காட்டியுள்ளது என்பதே உண்மை அதனால் கலைவளர இணைந்து வளம் சேர்ப்போம் பேச்சோடு இருப்பது பலம் அல்ல செயல் ஆக்கினால் கலை உயரும் ஈழவர் கலைவளரும் இதை உங்களுடன் பகிர்ந்து கொண்டதால் மிக்க மகிழ்ச்சி மீண்டும் மற்ற ஓர் கலைஞருடன் ‌ இணைவோம் நன்றி
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments System

Disqus Shortname

Comments system