கலையும் எமது மக்களும் இன்று புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் எங்கள்
சமூகம் கலைகளை கண்ணாக காத்து வருகின்றனர்,ஆனாலும் அதர்க்கான களங்கள்
இல்லாததால் அதன் சிறப்பை எமது இனம் எடுத்துக் காட்ட முடியவில்லை,
நாட்டில் வாழ்ந்த வாழ்வியலில் பொருளாதாரப் பிரச்சனைகள் அதிகமாக இருந்தது ஆனால் இங்கு அந்த நிலை மாறி கலை கற்பவர்தொகை அதிகரிக்கிறது அதே வேகத்தில் அடங்கியும் போகிறது திறமை மிக்க பாடகர்கள் இளம் தலை முறையினர் இருந்தும் களமில்லா நிலை, இங்கு ஒரு உதாரணம் என்று கூடக் கூறலாம்,
விதையை நட்டு அதைச் செடியாக்கி விட்டு காய்க்கின்ற நேரத்தில் நீர் ஊற்றி பயன் அடையாமல் இருக்கின்றோம், கலையை அதன் தார்பரியத்தை புரியாதவர்களாக இருக்கிறோமே என்று எம்மை நாமே கேட்கும் அளவுக்கு நாம் நானிக் கூனி நிக்கிறோம்,
வானொலிகளும் தொலைக் காட்சிகளும் பேச்சில் இருக்கும் வீராப்பு செயலில் இல்லை, ஊடகங்கள் என்ற முறையில் அவர்களிடம் தான் இதன் விழிப்புணர்வு இருக்க வேண்டும். ஆனால் எம்மவர் சாவக்கேடு அவர்கள் ஆரம்பிக்கும் போது உங்கள் வானொலி, உங்கள் தொலைகாட்சி என்பார்கள் பின் தங்கள் நிலையில் மாற மாட்டார்கள் காசுகொடுத்து வாங்கி நிகழ்வுகளை போடுவார்கள் காசு கொடுத்து வேறுநாட்டுக் கலைஞர்களை கூப்பிடுவார்கள் அவர்களை விளம்பரப் படுத்தி ஆயிரம் தரம் விளம்பரம் போடுவார்கள் எமது கலைஞர்கள் ஏதாவது நிகழ்வுகள் நடத்த விளம்பரம் போடக் கேட்டால் விலாவிரையாக விலை பேசுவார்கள்.
உழைப்பது எம் இனத்திடம் அவர்கள் உயர்வுக்கு தடையாகவும் தர்மம் இல்லாமலும் நடக்கிறீர்கள். சொல் ஒன்று செயல் ஒன்று என்று செய்து கொண்டு எம் இனக் கலை விழுமியங்களாம் எதிர்காலச் சந்ததிக்கு இடர் இடாதீர்கள். எதையும் அமத்தி அடிக்க நினைக் காதீர்கள் விழிப் புணர்வு கொண்டு விடைகாணுங்கள் அதிலும் சில ஊடகக்கலைஞர்கள் சொல்கிறார்கள் இந்தியாவில் இருந்து வரும் கலைஞர்களைபேட்டி எடுப்பதர்காகதான் கலையகம் அமைக்கிறோம் என்று அப்படியானால் எம் ஈழக் கலைஞர்கள் என்ன மட்டமானவர்களா புலத்தில் இருக்கும் தாய் நிலத்தில் இருக்கும் எம் கலைஞர்கள் நாதியற்றவர்களா இவர்களை யார் முன்கொண்டுவருவர் என்பதும் கேள்விக் குறியானதா?ஆனால் உங்களுக் கெல்லாம் உங்கள் பிள்ளை உணவு இல்லாமல் இருக்கிதே என்ற என்னம் வந்தாலே எமதுகலைஞர்கள் முகம்காட்டமுடியும் பணம் வாங்குவது விளம்பரம்வாங்குவது எம்மிடத்தில்
தொலைக்காட்சி காட் விற்பது எம்மிடத்தில் தொலைக்காட்சி இயங்க உதவிகேட்பதும் எம் இனத்திடம் ஆனால் எதற்காக?
எம் இனக்கலைஞர்களை வளர்த்து எடுப்பதில் மட்டும் ஆர்வக்குறைவு நாதியற்ற தமிழராய் நாடுவிட்டு நாடுவந்தும் நாம் இன்னும் திருந்தவில்லையா?கேடுகெட்டு மற்றவர்
கையை நம்பிவாழும் வாழ்கை தான் இன்னும் தொடரவுள்ளதா? அல்லது பாடுபட்டு பணத்தையீட்டி பயின்றகலை அழிந்து போவதா ?அல்லது கேடுகெட்ட எம்மினம் நான்டு நின்டு அழிந்துபோவதா? தனிவழி செல்லாது தார்மீகப்பணி என்ன? என்று உணர்ந்தால் தானாக வழிவகைகள் கூடிவரும் இப்படியே கால கால மாக அடிமைகளாக இனத்துவத்திலும் இசைத்துவத்திலும் கலைத்துவத்திலும் அன்று எம்மினத்தை ஆண்டவர் அடக்கியதுபோல் இங்கு செய்து எம் இனத்தின் ஆற்றலை அறிவை
மழுக்கி விடாதீர்கள். எதிர்காலச் சந்ததிக்காய் களம் கொடுங்கள், பேச்சோடு இன்றி செயல் ஆற்றுங்கள். நல்ல மனிதரை
நல்ல கலைஞரை இனம் காணுங்கள், அதை முகம்காட்டுங்கள், பணம்கொடுத்து வாங்கி போடும் நிகழ்வோடு எமது கலைஞர்களையும் இணையுங்கள் ,எதிர்கால சந்ததி அதுவும் புலம் பெயர் நாட்டில் வளம் உண்டு, அதை இடம்கண்டு
கலைஞர்களை ஊக்கிவித்து ஊடகத்தின் வலிமையை இனம்காட்டுங்கள் .அதுதான் தார்மீகம். நாங்கள் மட்டும் தொலைக்காச்சியோ வானொலியோ நடத்த வில்லை. மற்றைய இனத்தைப்பாருங்கள் ,அவர்கள் தனக்கு மிஞ்சித் தானே தானம் செய்கிறார்கள் ,நாம் எம்மிடம் இருக்கும் வளம் தொலையட்டும் மற்றவர் வளம் உயரட்டும் என்று வீம்புக்கு செய்கிறோம், என்று தான் ஆதங்கம் தோன்றுகிறது. தானம் சிறந்தது ஆனால் நம் இனம் கலைவளம் நிறைந்திருக்கும் போது அவர்களுக்கும் வளம் சேர்ப்பது வரலாறு மறக்காத வழிகாட்டியாக நீங்கள் மாறலாம் நாங்கள் தானம் செய்தே எம் கலைப் பொக்கீசங்களை தொலைக்கிறோம்.
வரலாறு இல்லாத வாழ்கை எப்படி இருக்கும் என்பது நம் இனவரலாறு இல்லாதது அறிந்து கவலையுற்ற நாங்கள் எங்களுக்கு எங்கள் மக்களுக்கு எங்கள் கலை வடிவங்களுக்கு என்ன செய்தோம் என்பதை உணர்வோம் ஊடகம் சார்பில் கலைஞர்களை ஊக்கம் செய்தவரும் இருக்கலாம் செய்யாதவரும் இருக்கலாம் யாரையும் புன்படுத்துவது நோக்கமல்ல நாம் பண்படுவோம் கூடி நின்று தனித்துவம் காண்போம் குட்டை குளமாய் இல்லாது நல் நீராய் மாறுவோம் நிமிந்து நிற்போம் முன்பு எமது தலைமுறை விட்ட தவறுதனை
நாமும் விடாது விழித்திட விடப்பட்ட வார்தைகளே இவை.
விதைத்த நல் நெல்மணியை அறுபடைகானும் போது விவசாயிக்கு
எப்படி மனமகிழ்வோ! அதுபோல் தனித்துவம் நாம் கொண்டால் வரும் மனமகிழ்வு !(இப்படி ஆதங்கம்)
சொற்கலிலே துாக்கிடவும் இல்லை-இந்த
சுமையான மனத்தாலே தொல்லை-இவை
பொய்யான வார்த்தைகளும் இல்லை
அட …போ என்று விடுவதாயும் இல்லை
தட்டிக்கேட்டிடப் பயம் இல்லை -இதில்
நமது சந்ததிகள் பலன் தானே கொள்ளை
விழித்திடுவோம் செயலில் விரைந்திடுவோம்
இந்தத் தனித்துவத்துக்காய்
இங்கே யார் சொல்வது? யார் கேட்பது ?
அப்ப தெரியாமல் கேட்கிறன்
யார் ?—-பூ….னைக்கு மணிகட்டுறது ?தெரியேலை…பார்ப்பம்?
அன்புடன் ஈழக்கவி.

0 Kommentare:
Kommentar veröffentlichen