கனடாவைத் தளமாகக்கொண்டு இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம், என்னும்
அமைப்பு 2012ம் ஆண்டுக்கான இயல் விருதுகளைப் பெறுவோரின் பெயர்களை கடந்த
15ம் திகதி கனடா ரடிசொன் தங்கு விடுதியில் நிகழ்ந்த விருது வழங்கும்
வைபவத்தில் அறிவித்து அவர்களுக்கான விருதுகளைவழங்கிக் கௌரவித்துள்ளது.
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் கலைஞர்கள் கல்வியாளர்கள், எழுத்தாளர்கள்,
வாசகர்கள், விமர்சகர்கள், கொடையாளர்கள் ஆகியவர்களின் ஆதரவுடன் ஓர்
அறக்கட்டளையாக 2001ம் ஆண்டு ரொறொன்ரோவில் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த இயக்கத்தின் பொதுவான நோக்கம் உலகமெங்கும் பரந்திருக்கும் தமிழை வளர்ப்பதாகும். தமிழ், ஆங்கில நூல்களைப் பரஸ்பரமொழிபெயர்ப்புச் செய்வது, அரிய தமிழ் நூல்களை மீள் பதிப்புச் செய்வது, தமிழ்ப்பட்டறைகளை நடத்துவது, நூலகங்களுக்கு இலவசமாகத் தமிழ் நூல்கள் அளிப்பது, தமிழ் சேவையாளர்களுக்கு விருதுகள் வழங்குவது போன்ற செயல்கள் மேற்குறித்த நோக்கத்தினுள் அடங்குகின்றன.
இவ்வகையிலேயே இவ்வருடமும் 2012ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறித்த இயல்விருது வழங்கும் வைபவத்தின் மையமாக அமையும் வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான விருது இம்முறை திரு நாஞ்சில் நாடன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 2012 ஆண்டுக்கான எனைய விருதுகள் கீழ்வரும் பிரிவுகளில் அறிவிக்கப்பட்டுள்ளன

0 Kommentare:
Kommentar veröffentlichen