ஏறியவரும்
ஏறி மிதித்தவரும்
பாறியவரும்
பாறி விழுந்தவரும்
தேறிட முடியாத
தேவங்குகள்..!
தூண்டியவரும்
தூண்டப் பட்டவரும்
தாண்டியவரும்
தட்டியவரும்
ஏணிகளை
ஏளனமாக்கும்
ஏமாளிகள்.!
ஏணிகள் தம்
பாணியையும்
பணியையும்
மாற்றுவதில்லை.
சிலுவைகள்
நிலுவையில்
ஆணி அடிப்பவர்கள்
அடியுங்கள்
கல்வாரிப் பயணங்கள்
முடிவதில்லை.!
பித்தர்கள் தமை
சித்தர்களாக்கி
சிறுமையில்
திகழ்கின்றனர்.
மன உயரங்களை
அறியிலர். அர்த்த
ராத்திரியில் குடை
தாங்கிகளாக
அலைகின்றனர்.!
ஏறி மிதித்தவரும்
பாறியவரும்
பாறி விழுந்தவரும்
தேறிட முடியாத
தேவங்குகள்..!
தூண்டியவரும்
தூண்டப் பட்டவரும்
தாண்டியவரும்
தட்டியவரும்
ஏணிகளை
ஏளனமாக்கும்
ஏமாளிகள்.!
ஏணிகள் தம்
பாணியையும்
பணியையும்
மாற்றுவதில்லை.
சிலுவைகள்
நிலுவையில்
ஆணி அடிப்பவர்கள்
அடியுங்கள்
கல்வாரிப் பயணங்கள்
முடிவதில்லை.!
பித்தர்கள் தமை
சித்தர்களாக்கி
சிறுமையில்
திகழ்கின்றனர்.
மன உயரங்களை
அறியிலர். அர்த்த
ராத்திரியில் குடை
தாங்கிகளாக
அலைகின்றனர்.!
ஆக்கம் கவிஞர் தயாநிதி
0 Kommentare:
Kommentar veröffentlichen