கனவுகளுக்கு கருவறை வேண்டும் கவிதை அ.பவளம் பகீர்.

கனவுகளுக்கு கருவறை வேண்டும்
நினைவுகளுக்கு தாலாட்டு போதும்..

கால நீட்சியில் கனவது பிரசவிக்கப்படும்
நினைவுகளை தாலாட்டி
நீ தூங்க வைத்திட வேண்டும்...

நினைவென்ற வானமதிலே தான் நாளும்
கனவென்ற மேகங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன...

பிரவசங்கள் நிகழ்ந்தாலும்
சில பொழுதில் கருச்சிதைவுகளும் நடந்தேறிவிடுகின்றனவே...

கனவது நாளும் உனை
எதையோ ஒன்றை தேட வைக்கும்
நினைவது உனை எங்கேனும்
நகர முடியாமல் கட்டிப் போட்டிடுமே..

கனவது நொடியும் ஏனோ தூங்கவிடாது
நினைவது தனிமைகளை தந்து சிறைப்படுத்திவிடுமே...

கனவோ சிறகுகளை தந்துவிடும்
நினைவுகளோ எங்காவது அமர வைத்துவிடுமே...

கனவுகள் தேடலாக இருந்திடும்
நினைவுகள் கடந்து போனவற்றின்
அசை போடலாக இருந்திடுமே..

கனவது சிலதருணம் கலைந்தும் போகலாம்
நினைவது நிழலாய் தொடரந்து கொண்டே இருக்கும்...

கனவிது பீனிக்ஸ் பறவைகள் போல
சாம்பல் மேடுகளிலிருந்தும் பறக்க முயற்சித்திடும்
நினைவுகளோ பூக்களாய் தினம்
தினம் மலர்ந்து வாடி உதிர்ந்து போகின்றனவே...

கனவுகள் காலத்தின் கைகளில்
தவழ்ந்திடும் குழந்தைகள்
நினைவுகள் இனிமையென்றாலும்
சிறகொடிந்த பறவைகளாகவே இருந்திடும்...

கனவுகள் வாழ்க்கையை அழகுபடுத்துகின்றன
நினைவுகள் நாட்களை விழுங்கிக் கொள்கின்றன..

கனவும் உண்மையில் அழகே
நினைவும் இனித்திடும் சுகங்களே

கனவுகள் சரித்திரத்தின் கால்கோள் மட்டுமல்ல
விருட்சத்தின் விதைகளும்தானே...

நினைவுகள் நாளைய பயணத்தின்
பாதைகளிற்கான வழிகாட்டிகள் தானே...

கனவுகளும் நினைவுகளுமே
தினம் உனை தூக்கிச் சுமக்கின்றன..

கனவு ஒருநாள் மெய்ப்படும் - நீ
தினம் அவ் எண்ணத்தோடு பயணித்தால்

நினைவுகள் மனதை வருடும்
கனவுகளும் ஒருநாள் நிஜங்களாகும்
காலத்தோடு கைகோரத்து பயணித்திடு
கனவுகளோடு போராடி ஜெயித்திடு....!!
 
 ஆக்கம்
அ.பவளம் பகீர்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments System

Disqus Shortname

Comments system