உன்னுள்
உருவான போது
உன்னை
எட்டி உதைத்தேன்
நான்
உலகத்தை கண்டதுமே
என்னைக்
கட்டி அணைத்தாய்
உருவான போது
உன்னை
எட்டி உதைத்தேன்
நான்
உலகத்தை கண்டதுமே
என்னைக்
கட்டி அணைத்தாய்
உதிரத்தை
பாலாக்கி
ஊட்டி
மகிழ்ந்தாய்
உன் தூக்கத்தை
எனதாக்கி
உன் மடியில்
தொட்டில்
அமைத்தாய்
பாலோடு
அன்பையும் நீ
சேர்த்து ஊட்டினாய்
தேனான
தமிழை
ஊட்டி வளர்த்தாய்
பத்திரமாய்
வளர்த்தென்னை
பள்ளி அனுப்பினாய்
படிக்காமல் நான் வந்தால்
பரிந்து பேசினாய்
வளர்ந்துவிட்டேன்
ஆனாலும்
நானின்னும்
உந்தன்
குழந்தை தானம்மா
உன் மடியில் தூங்கும்
நாளோ
இனி என்று தானம்மா...
அன்னையர் தின வாழ்த்துக்கள்
ஆக்கம் அருள் நிலா வாசன்
பாலாக்கி
ஊட்டி
மகிழ்ந்தாய்
உன் தூக்கத்தை
எனதாக்கி
உன் மடியில்
தொட்டில்
அமைத்தாய்
பாலோடு
அன்பையும் நீ
சேர்த்து ஊட்டினாய்
தேனான
தமிழை
ஊட்டி வளர்த்தாய்
பத்திரமாய்
வளர்த்தென்னை
பள்ளி அனுப்பினாய்
படிக்காமல் நான் வந்தால்
பரிந்து பேசினாய்
வளர்ந்துவிட்டேன்
ஆனாலும்
நானின்னும்
உந்தன்
குழந்தை தானம்மா
உன் மடியில் தூங்கும்
நாளோ
இனி என்று தானம்மா...
அன்னையர் தின வாழ்த்துக்கள்
ஆக்கம் அருள் நிலா வாசன்
0 Kommentare:
Kommentar veröffentlichen