கனடா, பிரான்ஸ், கட்டார், ருமேனியா, சுவிற்ஸர்லாந்து, டுனீசியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் ஏற்பாடு செய்யப்படும் போன்ஜோ சினிமாவில் “La Francophonie” (OIF) சர்வதேச ஸ்தாபனத்தின் உறுப்பு நாடுகளில் தயாரிக்கப்பட்ட சிறந்த விமர்சனத்தினை பெற்ற திரைப்படங்களைப் பார்வையிடலாம்.
இரண்டு சிறுவர்களுக்கான திரைப்படங்கள் உள்ளடங்கலாக 12 திரைப்படங்கள் முற்பகல் 11 மணிக்கும் பிற்பகல் 3 மணிக்கும் மாலை 6.30 மணிக்கும் திரையிடப்படவுள்ளன. சகல திரைப்படங்களும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் திரையிடப்படும். அதற்கான அனுமதி இலவசம்.
இலங்கை திரைப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் தயாரிப்புகளை சிறப்பிக்கும் நோக்குடன் ஒவ்வொரு திரைப்படத்தின் முன்னதாக இலங்கை தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்ட ஒரு குறும் திரைப்படம் காட்சிப்படுத்தப்படும். விழாவில் பல ஆவணப்படங்கள் மற்றும் திரைப்படங்களை இயக்கிவரும் பல ஒலி, ஒளி துறை தேசிய நிறுவனங்களுடன் தொடர்புடையவரும் இலங்கையின் பிரபல்யமான திரைப்பட தயாரிப்பாளருமான எம். டி. மகிந்தபால நடத்தும் ஒரு நாள் கருத்தரங்கும் இடம்பெறவுள்ளது.
இலங்கை திரைப்படத்துறைக்கு ஆற்றிய பங்களிப்பை கௌரவிக்கும் முகமாக இம் மாதம் 29ஆம் திகதி இவ் வருட ஃபிராங்கோபோன் ஆரம்ப வைபவம் அருண ஜயவர்தனவின் திரைப்படமான ‘நிகினி வெஸ்ஸ” அதாவது ஆவணித் தூறல் – பூமியை முத்தமிடாத மழைத் தூறல், வாழ்க்கை மரணம் எதிர்பார்ப்புக்கள் என்பவற்றினூடான உணர்வு நிறைந்த பயணம் என்ற குறுந்திரைப்படம் திரையிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Kommentare:
Kommentar veröffentlichen