உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தாய்மொழி தின நிகழ்வு

இன்றைய தினம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளையினரால் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடத்தி முடித்துள்ளனர்.

குறித்த நிகழ்வு கிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகத்தின் தமிழ் பாட உதவிக் கல்விப்பணிப்பாளர் பிறேமா மதுரநாயகம் தலைமையில் நடைபெற்றது.


இந்த நிகழ்வின் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சி.சிறீசற்குணராசா, சிறப்பு மனவளக்கலை பேராசிரியர் அருள்நிதி சி.முருகானந்தவேல், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் ஜேர்மனி கிளையின் தலைவர் இ.இராஜசூரியர், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளையின் ஊடக இணைப்பாளரும் தினகரன் பிரதம ஆசிரியருமான ரீ.செந்தில்வேல், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளையின் இணைப்பாளர் பீ.பிறேம்குமார் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளையின் தலைவர் அருணாசலம் சத்தியானந்தம் மேற்படி நிகழ்வுகளை மிகவும் சிறந்த முறையில் ஒழுங்கமைத்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்க நிகழ்வில் உலகத்து மொழிகள், அவற்றின் வளர்ச்சி, தொன்மம், சிறப்பு அவற்றினுள் தமிழ் மொழி பெற்றுள்ள இடம் தமிழ் மொழியின் சிறப்புக்கள், தமிழர்களாய் உள்ளவர்களது பெருமைகள் தமிழ் மொழியின் வளரச்சி, தமிழ்மொழிப் பற்று போன்ற விடயங்கள் தொடர்பில் விருந்தினர்கள் உரையாற்றியுள்ளனர்.

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தினால் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி மாணவர்களிடையே நடாத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, விவாதப்போட்டி என்பனவற்றில் வெற்றியீட்டிய மாணவர்கள் விருந்தினர்களால் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.





Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments System

Disqus Shortname

Comments system