கிழக்கின் இளம் கல்வியாளர்கள்

உலகின் முதல் தமிழ் பேராசிரியரை நமக்கு தந்தது கிழக்கு மண் சுவாமி விபுலானந்தர் தொடக்கம் உலகம் போற்றும் நம் பேராசிரியர் மெளனகுரு என தமிழ் கல்வியுலகுக்கும் கலை இலக்கிய உலகுக்குக்கும் கிழக்கு மாகாணம் பெரும் பங்களிப்பை செய்துள்ளது.

கிழக்குப் பல்கலைக் கழகத்தின் தோற்றம் பல இளம் கல்வியாளர்களை நமக்கு இனங் காட்டியுள்ளது.அவர்களில் பலர் என் மாணவர்கள் என்பதில் பெருமையுறும் என் மனம்.

ஆய்வியல் அறிஞன் சு.சிவரத்தினம்

கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத் துறையின் முதல் மாணவர் தொகுதியில் கல்வி கற்று பல்கலைக் கழகத்திலேயே தற்காலிக விரிவுரையாளராக பணியாற்றி பேராசிரியர் சிவத்தம்பியின் கீழ் இள முனைவர்பட்டம் பெற்றவர்.மதுரை காமராஜர் பல்கலையில் கலாநிதி பட்டம் பெற்றவர்.முற்போக்கு ஆய்வியல் நோக்கில் பல ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி தமிழ் ஆய்வுலகில் தனி முத்திரை பதித்தவர்.கடந்த பல ஆண்டுகளாக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் ,காட்சி புல கற்கைகள் துறையில் விரிவுரையாளராக சிறப்பாக பணியாற்றி வருகிறார்.கூத்து மீளுருவாக்கம் ஈழத் தமிழர் ஓவியம் என்னும் பேசு பொருட்களில் சொல்லாடலில் முக்கிய கவனிப்பு பெற்ற ஆய்வு கட்டுரைகளை படைத்தவர்.கிழக்கு மண்ணுக்கு பெருமை சேர்க்கும் நம்பிக்கை தரும் இளம் அறிஞர்.

இசையறிஞன் த.பிரதீபன்

இலங்கையில் இசைக் கலையில் புகழ் பெற்ற சுவாமி விபுலானந்தா இசை நடனக் கல்லூரியின் முதல் அதிபர் என பெருமை பெற்ற திருமதி தட்சணாமூர்த்தியின் இசை வாரிசு.பாரம்பரியமான இசைக் குடும்பத்தில் பிறந்து இன்று இசையறிஞனாக உயர்ந்திருக்கும் கலாநிதி பிரதீபன்.வாய்ப்பாட்டு,மிருதங்கம் ,தபேலா,வீணை,ஹார்மோனியம் என வாத்தியங்களை சிறப்பாக கையாளும் திறன் படைத்தவர்.நம் மண்ணின் இசை பற்றிய புரிதலும் அது பற்றியதான ஆய்வு முயற்சிகளை மேற்கொண்டிருப்பவர்.இன்று சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் இசை விரிவுரையாளர்.வெறும் கர்நாடக சங்கீதத்த்குள் மாத்திரம் முடங்கி விடாமல் ஈழத் தமிழர்களுக்கான தனித்துவ இசை பற்றிய ஞானமும் தேடலும் மிக்க இசையறிஞன் இவன்.

மண்சார் மரபியலறிஞன் மோகனதாசன்

பல்கலை விற்பன்னன் சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நாடகத்துறை விரிவுரையாளர்.பாடகன்,நடிகன்,ஆடகன் பறை ,உடுக்கு,மத்தளம் என நம் மண்ணின் மரபு வாத்தியங்களை சிறப்பாக வாசிக்கும் திறன் படைத்தவர்.எனுடைய நாடகங்கள் பலவற்றிற்கு நடிப்பு இசை என உயிர் கொடுத்தவர்.நம் கூத்து இசை மரபின் எல்லா நுட்பங்களையும் அறிந்த மரபியலறிஞன்.கிழக்கு மண்ணின் பாரம் பரிய கலைகளின் மீட்டுருவாக்க முயற்சிகளில் முன்னின்று உழைப்பவர்.ஆய்வு நிகழ்த்துகை என எல்லா தளங்களிலும் நம்பிகை தரும் மரபியலறிஞன்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments System

Disqus Shortname

Comments system