ரம்மியமான காலம்
கடந்து போனோம்
தொலைதூரம் வந்து
தொலைத்து நின்றோம்.../
அதிகாலை வேளை
அம்மாவின் அதட்டல்
அண்ணாவின் சத்தம்
அக்காவின் சண்டை.../
இத்தனையும் இழந்து
இன்று வாழ்கின்றனர்
ஈழத்திலும் இல்லை
புலத்திலும் இல்லை .../
அருகிருந்தும் பேசாத
உறவுகள்
ஆளுக்கொரு கையில்
அலைபேசிகள்
நேரம் காலம் கடந்து
சிணுங்கிடும் சத்தம்.../
யார் என்று கேட்க
அம்மாக்கு கூட உரிமை இல்லை
இரவும் பகலும்
மின்வழி செய்தி
என்ன தான் இருக்கிறது
என்று புரியாத புது வழி../
உறவுகளும் இல்லை
ஊரும் இல்லை
தெரிந்தவர்களும் இல்லை
தேசம் விட்டு தேசம் கடந்து
உண்மை தெரியாத
உருவம்
சொல்வதைமட்டுமே
நம்பும் அறிவு
நாளும் பொழுதும்
வளரும் நட்பு...//
அதுமட்டுமா..
காதல் ...&//
என்ன இது
கடையிலே கிடைக்கிறது
முடிந்ததும் வாங்கிக் கொள்ள
இல்லை திருப்பிக் கொடுத்து
காசு வாங்க
உள்ளங்களின் பரிமான வளர்ச்சி
பரிமாற்றமாகி
வயதெல்லையின்றி
பெரிசும் தான்
சிறிசும் தான்
"கண்டதும் காதலாமே,.."
கொண்டதே கோலமாகி...!!
ஒரு நாள் பார்த்து
மறுநாள் காதல் சொல்லி
மணிக்கணக்கில் பேசி
மரணம் வரை தொடரும் என்றுசொல்லி
மாதம் கூட தாண்டியிராது
மறந்து போகும் உறவுகளாய்...!!
இதற்குள் எத்தனை
உள்ளம் இழந்து
தன் மானம் இழந்து
இறுதியில் உயிர்கூட
போகுதே....!!
ஏன்னிந்த அவலம்
யாரிதைப் புரிவர்
இல்லை
யாரிதைச் சொல்வர்
புரியாது புலம்பும்
அம்மாக்கள் ஏராளம்...!!!?
"ஆக்கம் *ஜெசுதா ,யோ"* கவிதை
கடந்து போனோம்
தொலைதூரம் வந்து
தொலைத்து நின்றோம்.../
அதிகாலை வேளை
அம்மாவின் அதட்டல்
அண்ணாவின் சத்தம்
அக்காவின் சண்டை.../
இத்தனையும் இழந்து
இன்று வாழ்கின்றனர்
ஈழத்திலும் இல்லை
புலத்திலும் இல்லை .../
அருகிருந்தும் பேசாத
உறவுகள்
ஆளுக்கொரு கையில்
அலைபேசிகள்
நேரம் காலம் கடந்து
சிணுங்கிடும் சத்தம்.../
யார் என்று கேட்க
அம்மாக்கு கூட உரிமை இல்லை
இரவும் பகலும்
மின்வழி செய்தி
என்ன தான் இருக்கிறது
என்று புரியாத புது வழி../
உறவுகளும் இல்லை
ஊரும் இல்லை
தெரிந்தவர்களும் இல்லை
தேசம் விட்டு தேசம் கடந்து
உண்மை தெரியாத
உருவம்
சொல்வதைமட்டுமே
நம்பும் அறிவு
நாளும் பொழுதும்
வளரும் நட்பு...//
அதுமட்டுமா..
காதல் ...&//
என்ன இது
கடையிலே கிடைக்கிறது
முடிந்ததும் வாங்கிக் கொள்ள
இல்லை திருப்பிக் கொடுத்து
காசு வாங்க
உள்ளங்களின் பரிமான வளர்ச்சி
பரிமாற்றமாகி
வயதெல்லையின்றி
பெரிசும் தான்
சிறிசும் தான்
"கண்டதும் காதலாமே,.."
கொண்டதே கோலமாகி...!!
ஒரு நாள் பார்த்து
மறுநாள் காதல் சொல்லி
மணிக்கணக்கில் பேசி
மரணம் வரை தொடரும் என்றுசொல்லி
மாதம் கூட தாண்டியிராது
மறந்து போகும் உறவுகளாய்...!!
இதற்குள் எத்தனை
உள்ளம் இழந்து
தன் மானம் இழந்து
இறுதியில் உயிர்கூட
போகுதே....!!
ஏன்னிந்த அவலம்
யாரிதைப் புரிவர்
இல்லை
யாரிதைச் சொல்வர்
புரியாது புலம்பும்
அம்மாக்கள் ஏராளம்...!!!?
"ஆக்கம் *ஜெசுதா ,யோ"* கவிதை
0 Kommentare:
Kommentar veröffentlichen