பேராதனைப் பல்கலைக்கழக இந்து மாணவர் சங்கத்தின் அறுபதாவது இதழ் வெளியாகுவது

இரத்த ஆற்றைக் கடந்து மலரும் இந்து தருமம்....
பேராதனைப் பல்கலைக்கழக இந்து மாணவர் சங்கத்தின் அறுபதாவது இதழ் இன்று (24.02.2017)வெளியாகுவது மகிழ்ச்சியளிக்கிறது.
பேராதனை மாணவர்கள் கண்டிக் குளிரில் சொகுசாக வாழவில்லை. அவர்கள் பட்ட இன்னல்களிற்கும், அவர்தம் உணர்வுக் கிளர்ச்சிக்கும் சான்றாதாரமாக அமைவது "இந்து தருமம்" எனும் இதழேயாகும். .

யாழ்ப்பாண நூலகம் மாத்திரம் எரிக்கப்படவில்லை. பேராதனை இந்து மாணவர் சங்கம் பேணிவந்த நூலகத்தின் நூல்கள் யாவும் ஆலய மண்டபத்தில் குவிக்கப்பட்ட பின்னர் எரிக்கப்பட்டன. ஆலய விக்கிரகங்கள் உடைக்கப்பட்டு இயந்திரங்கள் சூறையாடப்பட்டன. ஆலயக் குருக்கள் வீட்டோடு சேர்த்து எரியூட்டப்பட்டார். ஆலயத்தில் வளர்க்கப்பட்ட பெண் மயில் இரு துண்டுகளாக வெட்டப்பட்டு பற்றைக்குள் வீசப்பட்டது.ஆண் மயில் கயவர்களால் கொண்டு செல்லப்பட்டது.

இவ்வாறு பல கசப்பான சம்பவங்களை பேராதனை இந்து மாணவர் சமூகம் எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. போராட்ட காலத்தில் வெளியாகிய இந்து தரும இதழ்களில் தாம்சார்ந்த சமூகம் குறித்து மாணவர்கள் சிந்திக்கும் வகையில் கருத்தாடல்கள் இடம்பெற்றமையையும் அவதானிக்க முடிகிறது.
பேராதனை இந்து மாணவர் சங்கம் வெறுமனே ஆலயத்திற்குள் மாத்திரம் முடங்கிவிடவில்லை என்பதை ஆரம்ப கால இதழ்களும், இதழ்களில் இடம் பெற்ற குறிப்புக்களும் உணர்த்தி நிற்கின்றன.


இன்று அறுபதாவது இதழ் வெளியாகிறது. துரதிஸ்டவசமாக ஆரம்பகால இதழ்கள் சிலவற்றை தேடியும் பெற முடியவில்லை. அவை நூலகம் எரியூட்டப்பட்ட போது அழிந்திருக்க வேண்டும்.எவரும் அது குறித்து அக்கறை கொள்வதாய் தெரியவில்லை.


இன்றளவும் இந்து மாணவர்களது தீவிரமான பற்றுதலால் இயங்கு நிலையிலிருக்கும் இந்து மாணவர் சங்கமும், ஆலயமும், "இந்து தருமம்" எனும் இதழும் வையகம் உள்ளவரை சிறப்புற எல்லாம் வல்ல இறைவன் துணைபுரிய வேண்டும்.


இவ்வருட இதழாசிரியருக்கும் , செயற்குழுவிற்கும் எனது இதய பூர்வமான வாழ்த்துக்கள்.
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments System

Disqus Shortname

Comments system