வாழ்க்கையின்
வாசிப்பும்
பண்பாட்டின்
நேசிப்பும்
கை விட்டுப்
போன காலமிது;
மதிப்பின்
பொருளுணரா
மிதிப்பில்
நான் எனும்
அகங்காரத்
திமிரில்
தம்பட்டம்;..!
ஒரு பாடல்
இரு நடனம்
அரைகுறை
காட்சிப் படுத்தல்
தமக்குள் தாமே
பரவசமாக்குது
இன்றைய கலை;!
இயக்கதின்
வலியுணரார்
படைப்பின்
பயனறியார்
பணத்தின்
மதிப்பறியார்
தம் எண்ணம்
போல் போலிகள்!
நம்பிக்கை
நாண் அறுத்து
நம்பிய இடத்தில்
தன் நலன் காத்து
தப்புத் தாளங்களால்
தாமே ஜோடிகளாகி
தாமே தடம் புரண்டு
திசை மாறுவார்
தயாரிப்புக்கு
சேதாரம்..!
திரைத்துறை
பெரும் துறையாவது
எங்கனம்
நாடுங்கள்
தேடுங்கள்
கூடுங்கள்
விடையுண்டு
வினாவேண்டாம்;..!
வாசிப்பும்
பண்பாட்டின்
நேசிப்பும்
கை விட்டுப்
போன காலமிது;
மதிப்பின்
பொருளுணரா
மிதிப்பில்
நான் எனும்
அகங்காரத்
திமிரில்
தம்பட்டம்;..!
ஒரு பாடல்
இரு நடனம்
அரைகுறை
காட்சிப் படுத்தல்
தமக்குள் தாமே
பரவசமாக்குது
இன்றைய கலை;!
இயக்கதின்
வலியுணரார்
படைப்பின்
பயனறியார்
பணத்தின்
மதிப்பறியார்
தம் எண்ணம்
போல் போலிகள்!
நம்பிக்கை
நாண் அறுத்து
நம்பிய இடத்தில்
தன் நலன் காத்து
தப்புத் தாளங்களால்
தாமே ஜோடிகளாகி
தாமே தடம் புரண்டு
திசை மாறுவார்
தயாரிப்புக்கு
சேதாரம்..!
திரைத்துறை
பெரும் துறையாவது
எங்கனம்
நாடுங்கள்
தேடுங்கள்
கூடுங்கள்
விடையுண்டு
வினாவேண்டாம்;..!
ஆக்கம் கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி
0 Kommentare:
Kommentar veröffentlichen