விண் மிஞ்சும் எண்ணங்கள்
கண்ணோடு கனவுகள்
உன்னோடு இருந்தால்
விண் கிழித்தே பறந்திடலாம்
மண் போற்ற வாழ்ந்திடலாம்
சாதிக்க பிறந்தவள் நீ யென்று
சரித்திரம் படைத்திடலாம்...
பொறுமை கருணை நீ கொண்டால்
பெருமையோடு வாழ்ந்திடலாம்
ஆதிக்கத்தை அடக்குதலை
அன்பாலே உடைந்தெறிந்திடலாம்
பெண்ணவள் உன்னதபிறவியென
தலை நிமிர்ந்தே நடந்திடலாம்..,
ஆக்கம்
ரதி மோகன்
0 Kommentare:
Kommentar veröffentlichen