சாதனைகள்...!!கவிதை கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி

பக்கதர்களாக
மாற்றினோம்
பற்றாளராக...,?
மறந்தது
என்னவோ
மங்காத
தமிழும்
மாறாத
பண்பாடும்..!

ஆனாலும்
ஆலயங்கள்
அமைத்து
ஆரதனைகள்
அன்னதானங்கள்
அழகாய்
நகருதிங்கே..!

வெள்ளைகளையும்
வேட்டி கட்டி
சேலை கட்டி
தேரும் இழுக்கச்
செய்தோம்;
வீதிகளில்
விழுந்தடித்து
கை ஏந்தி
உண்ணவும் வைத்தோம்..!

வேடிக்கை
காணிக்கையாகி
கண்மூடி
கதை அளப்போம்.
கைதாகியும்
காணாமலும்
தவறிப் போன
தமிழ் உறவுகளை
மறந்தும் போனோம்;!

ஜல்லிக்கட்டுக்கு
துள்ளிக் குரல்
உலகளாவிய
ரீதியில் ரீங்காராம்;
அன்று.! இன்று
ஆகாரம் இன்றி
தாயாகத்தில்
உண்ணவிரதப்
போராட்டம்...!
அடங்கிப் போனோம்..!
 
ஆக்கம்   கவிஞர் எழுத்தாளர் ரி.தயாநிதி
 
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

0 Kommentare:

Kommentar veröffentlichen

Disqus Shortname

Comments System

Disqus Shortname

Comments system