என் விழிகளின் அசைவில்
உன் மொழிகள் கேட்டு நான்
இதயம் இழந்த பேதை நானே
உறவாகி உயிர் தந்தது
உந்தன் மொழிகள் தானே ...
என் மௌனங்களை
மொழிபெயர்க்கும்
மொழிபெயர்ப்பாளனாக நீ
நெஞ்சாங்கூட்டில்
ஆயிரமாயிரம் எண்ணங்கள்
உன்னைப்பற்றியை...
அத்தனையும் எழுத
நினைக்கிறேன்
ஆனால் ...நீ தானே
என் உயிரும் மொழியுமாச்சே
மொழிபெயர்த்துக் கொள்வாய்யென
மௌனமாகிறேன்...
விழியொன்றே போதும்
உன் இதழால் என் இதழ்மூடி
கவி சொன்ன கற்பனையாளனே
மருள்கிறேன் உன்னிடம் நானே..
ஆக்கம் ..ஜெசுதா யோ.
உன் மொழிகள் கேட்டு நான்
இதயம் இழந்த பேதை நானே
உறவாகி உயிர் தந்தது
உந்தன் மொழிகள் தானே ...
என் மௌனங்களை
மொழிபெயர்க்கும்
மொழிபெயர்ப்பாளனாக நீ
நெஞ்சாங்கூட்டில்
ஆயிரமாயிரம் எண்ணங்கள்
உன்னைப்பற்றியை...
அத்தனையும் எழுத
நினைக்கிறேன்
ஆனால் ...நீ தானே
என் உயிரும் மொழியுமாச்சே
மொழிபெயர்த்துக் கொள்வாய்யென
மௌனமாகிறேன்...
விழியொன்றே போதும்
உன் இதழால் என் இதழ்மூடி
கவி சொன்ன கற்பனையாளனே
மருள்கிறேன் உன்னிடம் நானே..
ஆக்கம் ..ஜெசுதா யோ.
0 Kommentare:
Kommentar veröffentlichen