நேற்று நான் பார்த்த இக்குறும்படம், நகல் புலத்திலிருந்து இனிமேல்
வரவிருக்கும் தமிழ்ப்படங்கள் உலகத் தரத்தையும் விஞ்சியிருக்கும் என்பதற்கு
சான்றுபகரும் மற்றுமொரு படமாகும். குறும்படங்களில் தலைப்பும் வலிமையான
பங்காற்றும் என்பதையும் நகல் சொல்லியிருக்கின்றது.
ஈழத்தமிழரின் புலம்பெயர் வாழ்வில் தொலைந்துபோகும் உறவின் வலிமையை குறிப்புணர்த்தியதின் மூலம், தன் வலிமையையும் சுட்டிக்காட்டிய நகல், வெறுமனே அதனோடு நின்றுவிடாமல் உலகமயமாக்குதலில், மேலும் நகரமயமாக்குதலில் மனிதன் தொலைத்துக் கொண்டிருக்கும் மனித விழுமியங்களைப் பற்றியும் பொதுவாகச் சொல்லிச் செல்வதன் மூலம், நகல் தன் உலகத்தரத்தை வலிமையாக நிரூபிக்கின்றது.
ஈழத்தமிழரின் புலம்பெயர் வாழ்வில் தொலைந்துபோகும் உறவின் வலிமையை குறிப்புணர்த்தியதின் மூலம், தன் வலிமையையும் சுட்டிக்காட்டிய நகல், வெறுமனே அதனோடு நின்றுவிடாமல் உலகமயமாக்குதலில், மேலும் நகரமயமாக்குதலில் மனிதன் தொலைத்துக் கொண்டிருக்கும் மனித விழுமியங்களைப் பற்றியும் பொதுவாகச் சொல்லிச் செல்வதன் மூலம், நகல் தன் உலகத்தரத்தை வலிமையாக நிரூபிக்கின்றது.
இப்படத்தில் எனக்கு பிடித்த விடயங்கள். திரைக்கதை முற்றிலும் என்னைக்
கவர்ந்தது. சொல்லவந்த சேதியை சொல்வதில் எள்ளளவும் வழுவாமால், அதேவேளை
பார்வையாளனின் பலவித ஊகங்களுக்கும் இடமளித்து செல்லும் காட்சிகளினூடாக,
திரைக்கதை தொடக்கத்திலிருந்து முடிவுவரை அமைந்தவிதத்தினால், என்னை மிகவும்
கவர்ந்தது. இக்குறும் படத்தினை மீண்டும் ஒரு தடவை பார்க்கும்போது இதனை
நீங்களும் உணர்ந்து கொள்வீர்கள் என்றும் நம்புகின்றேன். திரைக்கதைக்கு
துணைபுரிந்த, செறிவுமிக்க, மிகவும் குறுகிய உரையாடல்கள், காட்சிகளின் மூலம்
திரைக்கதைக்கு மேலும் வலுவூட்டிய ஒளிப்பதிவு, திரைக்கதையின் நகர்வுகளுக்கு
ஏற்றவிதத்தில் வேகத்தை கட்டுப்படுத்திய எடிட்டிங் என்பன மிகவும்
சிறந்தவிதத்தில் நகலில் அமைந்திருந்தன. படத்தில் நடித்தவர்கள் தங்கள்
கதாபாத்திரத்தை உணர்ந்து, மிகையில்லாத இயல்பான நடிப்பால் திரைக்கதைக்கு
நன்கு மெருகூட்டியிருக்கிறார்கள். ரீரெக்காடிங் இசையும் படத்துடன்
பார்வையாளனை ஒன்றிணைந்து வைத்திருக்க துணை நிற்கின்றது. படத்தில் குறையே
இல்லையா? என்று நீங்கள் கேட்டால், அதற்கு என் பதில் படத்தைப் பார்த்தபின்
உங்களுக்கு குறையேதேனும் தெரிகிறதா? என்பதே. ஒற்றை வரியில்
வர்ணிப்பதானால் புலம்பெயர் தமிழரிடமிருந்து உலகத்தரம் வாய்ந்த படங்களை
எதிர்பார்க்கலாமென துல்லியமாகத் தெரிவிக்கும் நம்பிக்கையின் ஒளிக்கீற்று
நகல். இக்குறும் படத்தில் பங்காற்றியவர்களின் விபரங்கள் நடிகர்கள் :
பொன். தயா, பிரசான், ஜெயா கதை, திரைக்கதை, இயக்கம் : பொன். தயா
ஒளிப்பதிவு, படத்தொகுப்பு : பொன். கேதாரன் தயாரிப்பு : யாழ் மீடியா(நன்றி
0 Kommentare:
Kommentar veröffentlichen