கைகள் நிறைய மலர்கள்
மணம் இல்லா வாழ்க்கை
கண்கள் நிறைய கனவுகள்
நிறைவேறாத சோகங்கள்..
படிப்புக்கான ஆசைகள்
பார்க்க முடியாத பள்ளிகள்
எட்டாத தூரத்தில்
என்றுமே நினைவுகள்..
ஏழையாய் பிறந்தால் என்ன
ஏடுகள் எட்டாதோ?
எட்டிப் பிடித்தாலும் கூட
ஏற்றங்கள் வாராதோ?
கற்பனைகள் ஆயிரம்
நினைவுகளில் ஆர்ப்பரிக்கும்
என்றாலும் உண்மைகள்
நிச்சயமாய் ஆட்டுவிக்கும்,
மலர்கள் விற்கும் சிறுமி இவள்
வாடிப் போன மலராக
சோர்ந்து நிற்கும் கோலமது
சோகத்தை கூட்டுதையா..
கரங்களில் பற்றிய மலர்ச்செண்டு
காசாக மாறிடுமோ
அன்றைய பொழுதில் கொல்லும்
வயிற்று பசிதனை தான் நீக்கிடுமோ?
மணமில்லா வாழ்க்கையினை
மணம் வீச செய்திடுமோ?
ஒருவேளை உலை வைக்க
ஒத்தாசை புரிந்திடுமோ?
மணம் இல்லா வாழ்க்கை
கண்கள் நிறைய கனவுகள்
நிறைவேறாத சோகங்கள்..
படிப்புக்கான ஆசைகள்
பார்க்க முடியாத பள்ளிகள்
எட்டாத தூரத்தில்
என்றுமே நினைவுகள்..
ஏழையாய் பிறந்தால் என்ன
ஏடுகள் எட்டாதோ?
எட்டிப் பிடித்தாலும் கூட
ஏற்றங்கள் வாராதோ?
கற்பனைகள் ஆயிரம்
நினைவுகளில் ஆர்ப்பரிக்கும்
என்றாலும் உண்மைகள்
நிச்சயமாய் ஆட்டுவிக்கும்,
மலர்கள் விற்கும் சிறுமி இவள்
வாடிப் போன மலராக
சோர்ந்து நிற்கும் கோலமது
சோகத்தை கூட்டுதையா..
கரங்களில் பற்றிய மலர்ச்செண்டு
காசாக மாறிடுமோ
அன்றைய பொழுதில் கொல்லும்
வயிற்று பசிதனை தான் நீக்கிடுமோ?
மணமில்லா வாழ்க்கையினை
மணம் வீச செய்திடுமோ?
ஒருவேளை உலை வைக்க
ஒத்தாசை புரிந்திடுமோ?
ஆக்கம் ஈழத் தென்றல்
0 Kommentare:
Kommentar veröffentlichen