நீரதில் ஊறிய நெல்லு
வேரது கொள்வது இயல்பு
போரதில் வாழ்ந்த உயிரின்
மார்பதில் திடமும் அதிகம்
காலங்களை கடந்தவர்கள் எல்லாம்
ஞாலத்தில் நிலை பெற்றதென்றில்லை
காலத்தை வென்றவர்களுக்கு–எந்தப்
போகத்திலும் மரணமில்லை
சூலத்தில் இறுக்கிய தேசிக்காய்
சோற்றுத்திரளில் சுவை தராது
யோகத்தில் வாழுமுள்ளம் என்றும்
வானத்தையெட்டும் கனவு கொள்ளாது
வேரது கொள்வது இயல்பு
போரதில் வாழ்ந்த உயிரின்
மார்பதில் திடமும் அதிகம்
காலங்களை கடந்தவர்கள் எல்லாம்
ஞாலத்தில் நிலை பெற்றதென்றில்லை
காலத்தை வென்றவர்களுக்கு–எந்தப்
போகத்திலும் மரணமில்லை
சூலத்தில் இறுக்கிய தேசிக்காய்
சோற்றுத்திரளில் சுவை தராது
யோகத்தில் வாழுமுள்ளம் என்றும்
வானத்தையெட்டும் கனவு கொள்ளாது
ஆக்கம் ~வன்னியூர் செந்தூரன்~
0 Kommentare:
Kommentar veröffentlichen