எங்கும் வாழ்த்து எதிலும் வாழ்த்து
சுதந்திரமாம் பெண்ணுக்கு
புரியவில்லை தெரியவில்லை
போராட்டத்திற்குள் அவளிங்கு..
பட்டப்பகலில் வன்புணர்வுக்குள்
பச்சைப் பாலகனும் ஆபத்துக்குள்
பாலியல் நோய் பைத்தியங்களால்
பாரினிலே பாரியபிரச்சனையாகிறது..
பெண் மலருக்கு ஒப்பானவளென்று
கதையும் கவிதையும் சொல்கிறது
மேடைகளிலே பெண்உரிமை முழக்கம்
வெட்டிப்பேச்சாகி போகின்றது..
பெண்ணை நீ மதிப்பாயானால்
மண்ணை நீ மதிக்கிறாய் என்றர்த்தம்
பொன்னை நீ கொடுத்தாலும் பெண்
அன்பை எளிதில் பெற முடியாது..,
அவளின்றி இவ்வுலகு ஏது நீயறியாயோ
அவளுக்கொரு நீதி உனக்கொரு நீதிஎன்ற
உன் அடிமை சாசனத்தை நீ மாற்று
விண்தொட்டு உயர்கின்ற அவள் அறிவை நீ போற்று.,
சாதிக்க பிறந்தவள் பெண்ணிவளென்றே
சரித்திரத்தை நீ மாற்று துணிவோடு அவள்
எழுந்து நடந்தால் நீ புறமுதுகிட்டு ஓடும்
காலமொன்று வரும் காமுகப்பிசாசுகளின்
தலை நிலத்தில் உருளும் என சபதம் ஒன்று கேளு...
ஆதிக்க வெறியர்களின் அடக்குமுறைக்கு
அவள் வந்து வைப்பாளே ஒரு ஆப்பு
அந்த திருநாளே மகளிர் பெருநாள்
அர்த்தராத்திரியில் அச்சமின்றி அவள்
நடக்கும் நாளில் நீ சொல்லு வாழ்த்து...
ஆக்கம் :ரதி மோகன்
சுதந்திரமாம் பெண்ணுக்கு
புரியவில்லை தெரியவில்லை
போராட்டத்திற்குள் அவளிங்கு..
பட்டப்பகலில் வன்புணர்வுக்குள்
பச்சைப் பாலகனும் ஆபத்துக்குள்
பாலியல் நோய் பைத்தியங்களால்
பாரினிலே பாரியபிரச்சனையாகிறது..
பெண் மலருக்கு ஒப்பானவளென்று
கதையும் கவிதையும் சொல்கிறது
மேடைகளிலே பெண்உரிமை முழக்கம்
வெட்டிப்பேச்சாகி போகின்றது..
பெண்ணை நீ மதிப்பாயானால்
மண்ணை நீ மதிக்கிறாய் என்றர்த்தம்
பொன்னை நீ கொடுத்தாலும் பெண்
அன்பை எளிதில் பெற முடியாது..,
அவளின்றி இவ்வுலகு ஏது நீயறியாயோ
அவளுக்கொரு நீதி உனக்கொரு நீதிஎன்ற
உன் அடிமை சாசனத்தை நீ மாற்று
விண்தொட்டு உயர்கின்ற அவள் அறிவை நீ போற்று.,
சாதிக்க பிறந்தவள் பெண்ணிவளென்றே
சரித்திரத்தை நீ மாற்று துணிவோடு அவள்
எழுந்து நடந்தால் நீ புறமுதுகிட்டு ஓடும்
காலமொன்று வரும் காமுகப்பிசாசுகளின்
தலை நிலத்தில் உருளும் என சபதம் ஒன்று கேளு...
ஆதிக்க வெறியர்களின் அடக்குமுறைக்கு
அவள் வந்து வைப்பாளே ஒரு ஆப்பு
அந்த திருநாளே மகளிர் பெருநாள்
அர்த்தராத்திரியில் அச்சமின்றி அவள்
நடக்கும் நாளில் நீ சொல்லு வாழ்த்து...
ஆக்கம் :ரதி மோகன்
0 Kommentare:
Kommentar veröffentlichen