உயிர் கொடுத்து உலகை காட்டினாய்
உலகை படைத்த இறைவனும்
உன் அன்பில் உருகினான்
பாசப் பிணைப்பில் பண்பை புகட்டி
தோள் கொடுக்கும்
சகோதரியும் நீயானாய்
காதலின் கவித்துவத்துக்கு
கனவுகளை காவியமாக்கி
வாலிப வயதை
இனிமையுடன் வளமாக்கினாய்
உயிரோடு சரிபாதியாக இணைந்து
உறவுக்கும் அர்த்தம் தந்து
ஊன் உறக்கத்தை நீ மறந்தாய்
தன்னிலை நினைந்து வாழந்த வாழ்வை
பொறுப்பாக்கி சுயநலம் துறக்க
காரணியாய் மகளானாய்
பெண்ணே நீ இல்லை என்றால்
இந்த உலகமே உடையுமே
அன்பு எனும் மொழி அழிந்து வெறுமையாகுமே
ஆனாலும் அழகு பெண்ணே
எல்லோரும் வாழ நீ வாழ்ந்தாய்
சிறுமையில் ஏனோ நீ பலியானாய்
மாதர் தமை இழிவு செய்யும்
மடமை தனை கொளுத்துவோம்
மீரா , ஜெர்மனி
உலகை படைத்த இறைவனும்
உன் அன்பில் உருகினான்
பாசப் பிணைப்பில் பண்பை புகட்டி
தோள் கொடுக்கும்
சகோதரியும் நீயானாய்
காதலின் கவித்துவத்துக்கு
கனவுகளை காவியமாக்கி
வாலிப வயதை
இனிமையுடன் வளமாக்கினாய்
உயிரோடு சரிபாதியாக இணைந்து
உறவுக்கும் அர்த்தம் தந்து
ஊன் உறக்கத்தை நீ மறந்தாய்
தன்னிலை நினைந்து வாழந்த வாழ்வை
பொறுப்பாக்கி சுயநலம் துறக்க
காரணியாய் மகளானாய்
பெண்ணே நீ இல்லை என்றால்
இந்த உலகமே உடையுமே
அன்பு எனும் மொழி அழிந்து வெறுமையாகுமே
ஆனாலும் அழகு பெண்ணே
எல்லோரும் வாழ நீ வாழ்ந்தாய்
சிறுமையில் ஏனோ நீ பலியானாய்
மாதர் தமை இழிவு செய்யும்
மடமை தனை கொளுத்துவோம்
மீரா , ஜெர்மனி
0 Kommentare:
Kommentar veröffentlichen