இலக்கணத்தில் வல்லினத்தை காணவில்லையாம்
எடுத்துச் சென்றாயோ நீயேதும்...
வலிய ஓசை உடையதாலா
வல்லென்று இசைப்பதாலா ..
உன்னால் மெல்லினுமும் இடையினமும்
தொக்குநிற்கிறதே...
உடல்நிற்க உயிரெடுத்துப் போனாய்
என்னுள்ளம் கொள்ளை கொண்டவனே
நீயில்லாது நானும்
உயிரின்றி மெய்யானேன்
க் ச் ட் த் ப் ற் என்றஆறெழுத்தில்
உனக்கென்ன ஆசையோ
வல்லினமின்றி
இடையினம் தவிக்கிறது
மெல்லினம் பூப்போல் வாடுகிறது...
நெஞ்சாங்கூட்டில் இருந்து
இயம்பும் காதல் மொழிபோல
வல்லினமும் நெஞ்சத்தின்
ஓசையதே நீயறிவாயோ...
உயிரோடு மெய்யாகி
உயிர்மெய்யானது போல
உன்னோடு நானும்
என்னோடு நீயுமாக
இணைந்த காதலின்பமே
உயிரின் குறிலோடும் நெடிலோடும்
மெய்யின வல்லினங்கள் சேர்ந்து
காதலின் முதல் எழுத்து
உன்னதம் காண்கிறதே.
முதல் எழுத்தாய் நீயும்
சார்பெழுத்தாய் நானும் இருக்க
என்னவனே எடுத்துச்செல்
வல்லினம் போல
என்னை நீயும்..
ஆக்கம்.ஜெசுதா யோ.
எடுத்துச் சென்றாயோ நீயேதும்...
வலிய ஓசை உடையதாலா
வல்லென்று இசைப்பதாலா ..
உன்னால் மெல்லினுமும் இடையினமும்
தொக்குநிற்கிறதே...
உடல்நிற்க உயிரெடுத்துப் போனாய்
என்னுள்ளம் கொள்ளை கொண்டவனே
நீயில்லாது நானும்
உயிரின்றி மெய்யானேன்
க் ச் ட் த் ப் ற் என்றஆறெழுத்தில்
உனக்கென்ன ஆசையோ
வல்லினமின்றி
இடையினம் தவிக்கிறது
மெல்லினம் பூப்போல் வாடுகிறது...
நெஞ்சாங்கூட்டில் இருந்து
இயம்பும் காதல் மொழிபோல
வல்லினமும் நெஞ்சத்தின்
ஓசையதே நீயறிவாயோ...
உயிரோடு மெய்யாகி
உயிர்மெய்யானது போல
உன்னோடு நானும்
என்னோடு நீயுமாக
இணைந்த காதலின்பமே
உயிரின் குறிலோடும் நெடிலோடும்
மெய்யின வல்லினங்கள் சேர்ந்து
காதலின் முதல் எழுத்து
உன்னதம் காண்கிறதே.
முதல் எழுத்தாய் நீயும்
சார்பெழுத்தாய் நானும் இருக்க
என்னவனே எடுத்துச்செல்
வல்லினம் போல
என்னை நீயும்..
ஆக்கம்.ஜெசுதா யோ.
0 Kommentare:
Kommentar veröffentlichen